செய்தி வெளியீடு எண் :156 நாள் : 22.11 .2017 சேலம் மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படாத நிலையில் உள்ள வீடுகளை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் உடனடியாக சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் :156 நாள் : 22.11 .2017 சேலம் மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படாத நிலையில் உள்ள வீடுகளை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் உடனடியாக சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்

சேலம் மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படாத நிலையில் உள்ள  வீடுகளை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள்,   உடனடியாக சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 14 ல் உள்ள குமாரமிபட்டி கிழக்கு தெருவில் 22.11.2017 அன்று  ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள்  வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்,  பயன்படுத்தாத நிலையில் உள்ள வீடுகள்  சில இடங்களில் இருப்பதை கண்டறிந்தார்.  தினந்தோறும் களப்பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் , டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழுக்கள் உருவாகாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் சில வீடுகள் பயன்படுத்தப்படாமல் தொடர்ந்து பூட்டியே இருப்பதால்,  வீடுகளுக்குள்  மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் 500 மீட்டர் சுற்றளவுக்குள் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பயன்படாமல் பூட்டியுள்ள வீடுகளை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட உரிமையாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.  இந்நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.அ. அசோகன் , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு.கே.பி. கோவிந்தன் , உதவி பொறியாளர் திருமதி. பி. கலைவாணி, சுகாதார அலுவலர் திரு.கே. ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.  


வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.