செய்தி வெளியீடு எண் :155 நாள் : 20.11 .2017 சேலம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 383 பள்ளி வளாகங்களிலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :155 நாள் : 20.11 .2017 சேலம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 383 பள்ளி வளாகங்களிலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 383 பள்ளி வளாகங்களிலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது என 20.11.2017 அன்று சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 2 ஜாகீர் அம்மாபாளையம் கல்யாண சுந்தர நகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் விழப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதார மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி  செய்ய வேண்டும் என,  சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,  பள்ளி கல்வித்துறைக்கும் தகுந்த அறிவுரைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில்  மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில்  உள்ள அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என  மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 383 பள்ளி வளாகங்களில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மற்றும் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 5 இலட்சத்து 57 ஆயிரம் மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்து மாணவ, மாணவியர்களின் சுகாதார பாதுகாப்பினை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ள நிலையில்,  பெற்றோர்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டுச் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் முழு ஈடுபாட்டோடு தாங்கள் குடியிருப்பு பகுதிகளை பராமரிக்க முன்வர வேண்டும்.  மேலும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் வராத மாணவ, மாணவியர்களின் விவரங்களை உடனடியாக பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் , ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தங்கள் பகுதிகளுக்கு தினசரி வருகை தரும், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களிடம் உடனடியாக மாணவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  மாணவர்கள்  தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் சுகாதாரத் துறை அலுவலர்கள் அப்பகுதிகளுக்கு சென்று தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.  எனவே பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி, இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். பின்னர் கோட்டம் எண் 2 ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். 

இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஆர். ரவி, மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு.ப. ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் திருமதி. வி. திலகா , உதவி பொறியாளர்கள் திரு.பி. பழனிசாமி , திருமதி டி. அன்புச் செல்வி, திருமதி. எஸ். சுமதி , சுகாதார அலுவலர் திரு. எஸ். மணிகண்டன் , சுகாதார ஆய்வாளர் திரு. எ. கோபிநாத் ஆகியோர் இருந்தனர். 

  

 

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.