செய்தி வெளியீடு எண் :154 நாள் : 19.11 .2017 உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்

செய்தி வெளியீடு எண் :154 நாள் : 19.11 .2017 உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் அடிப்படையில், அஸ்தம்பட்டி  மண்டலம் கோட்டம் எண் 31 ல்  கோட்டை  மார்க்கெட் தெரு பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சித்லைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப, அவர்கள் 19.11.2017 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் உள்ள தேநீர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர்,  பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதற்காகவும் குடிநீர் சேகரித்து  வைக்கப்பட்டுள்ள  பிளாஸ்டிக் டிரம்கள், தொட்டிகள் ஆகியவை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள டிரம்கள் மற்றும் தொட்டிகளை உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்து, முறையாக மூடி வைத்து குடிநீரினை பொதுமக்களுக்கு தூய்மையாக வழங்கிகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மேற்கொள்ள  வேண்டும். 
 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்கள் , பேக்கரிகள், தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குவதை தொடர்ந்து கண்காணிக்க  வேண்டும் என சம்மந்தப்பட்ட  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வீணாகும் உணவு கழிவுகளை மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும், மாறாக சாக்கடை கால்வாய்களில் கொட்டக் கூடாது என தேநீர் விடுதி உரிமையாளரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார். 

பின்னர் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 58 ல் அம்மாள் ஏரி ரோடு 2 வது குறுக்கு தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். சேலம் மாநகராட்சியின் சார்பில் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், தேவைக்கும் மீறி குடிநீரினை சேமித்து வைக்க வேண்டாம் எனவும், குடிநீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் டிரம்களை 3 நாட்களுக்கு சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தார். சொந்த பணிகளுக்காக  வெளியூர் சென்றிருக்கும் பொதுமக்கள் பூட்டியுள்ள தங்களது வீடுகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் சுத்தப்படுத்துவதற்கு ,  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக் கொண்டார்.  
இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர் திரு.மு. கணேசன், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், மருத்துவ அலுவலர்கள் மரு.கே.ஜி. ராமச்சந்திரன், மரு.ஜெ. பானுமதி, உதவி செயற்பொறியாளர் திரு. ஆர். செந்தில்குமார்,  வட்டார வழங்கல் அலுவலர் திரு.எ. நாகூர் மீரான், உதவி பொறியாளர்கள் திரு.ஜெ. ஓபுளி சுந்தர், திரு.வி. ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் திரு.எம். சேகர், சுகாதார ஆய்வாளர்கள் திரு.கே. சித்தேஸ்வரன், திரு.டி. ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.