செய்தி வெளியீடு எண் :153 நாள் : 18.11 .2017 தூய்மை இந்தியா திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் :153 நாள் : 18.11 .2017 தூய்மை இந்தியா திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் முழு ஈடுபாட்டோடு   செயல்பட வேண்டும் என 18.11.2017 அன்று மைய அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பணியமர்த்தப்பட்டுள்ள பரப்புரரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ்  அவர்கள் தெரிவித்தார்.  

தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவுள்ள களப்பணியாளர்கள் அனைவரும் திட்டத்தின் நோக்கம் குறித்த தெளிவான அணுகுமுறையோடு , பொதுமக்களை சென்றடைய வேண்டும். முக்கியமாக பொதுமக்கள் வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான , நடவடிக்கையினை இத்திட்டத்தின் மூலம் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.  இத்திட்டம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் பொதுமக்களையும் பங்குகொள்ள வைப்பது தான் மிகச்சிறந்த நடவடிக்கையாகும். பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தனி நபர் கழிப்பிடங்கள் இல்லாதவர்களை , தனி நபர் கழிப்பிடங்கள் கட்ட வைப்பது, பொது கழிவறைகள் மற்றும் சமுதாய கழிப்பறைகள் தேவைக்கேற்ப கட்டுவதற்கு உதவி செய்வது, முறையான வகையில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தை பொதுமக்களுக்கு தெரிவிப்பது, உள்ளிட்ட பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, களப்பணியாளர்கள் பணியாற்றிட வேண்டும். மாநகராட்சி பகுதிகளுக்கு 2 கோட்டங்களுக்கு 1 பரப்புரையாளர்  என்ற விகிதத்தில் 30 களப்பணியாளர்களும், 4 மண்டலங்களுக்கு 1 கண்காணிப்பாளர்கள் வீதம்  4 கண்காணிப்பாளர்களும், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவதற்காக 1 ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 35 களப்பணியாளர்கள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  தினசரி பொதுமக்களை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் தேவைகளை உடனடியகாக  மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு  கொண்டு செல்லும் பணிகளையும் களப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுமனதோடு பணியாற்ற வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார். 

இக்கூட்டத்தில்  மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், சுகாதார அலுவலர்கள் திரு.எஸ். மணிகண்டன், திரு.எம். சேகர், திரு. வி. மாணிக்க வாசகம், திரு.கே. ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.