செய்தி வெளியீடு எண் :152 நாள் : 14.11 .2017 பொலிவுறு நகரம் (ளுஅயசவ ஊவைல) திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு எண் :152 நாள் : 14.11 .2017 பொலிவுறு நகரம் (ளுஅயசவ ஊவைல) திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

பொலிவுறு நகரம் (ளுஅயசவ ஊவைல) திட்டத்தின் கீழ்  பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள  பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை 14.11.2017 அன்று  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள்ஆய்வுசெய்தார். 
 
பொலிவுறு நகரம்  திட்டத்திற்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 20.09.2016 அன்று மத்திய  நகர்புற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் சேலம் மாநகராட்சியில்  இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளது. 
 
சேலம் மாநகரில் பகுதி அடிப்படையில் அபிவிருத்தி செய்தல் திட்டத்தின் கீழ்  பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. மார்க்கெட்  பகுதிகளை உள்ளடக்கி 690 ஏக்கர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.   இந்த பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை உள்ளடக்கிய  முழுமையான உட்கட்டமைப்புகள்  ஏற்படுத்தப்பட உள்ளது. 
மேலும் பகுதி அடிப்படையில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்      போக்குவரத்து மேலாண்மை ,  பேருந்து முணையம் அபிவிருத்தி செய்தல் , நவீன வாகன நிறுத்தம் அமைத்தல் ,   பொதுப் போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் ,   சாலை வடிவமைப்பு மற்றும் மறு வடிவமைப்பு பணிகள்   நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அரசு கட்டிடங்கள் 
வணிக வளாகங்கள் ,  வ.ஊ.சி. அங்காடியினை  புதுப்பித்தல் , திருமணி முத்தாறு அபிவிருத்தி திட்டம்,  போஸ் மைதானம் அபிவிருத்தி பணிகள், தகவல் பலகை மற்றும் பூங்காக்கள் அமைத்தல்,  சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தல் ,  மின் சேமிப்பு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் மற்றும்  குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை  போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.  
நகர் முழுமைக்கான (ஞயn ஊவைல) திட்டத்தின் கீழ் சேலம் மாநகர் முழுமைக்கும் மின் ஆளுமை மூலம் செயலமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.  குடிநீர் விநியோகத்தில் அளவு மானி பொருத்துதல், கணினி மூலம் போக்குவரத்து மேலாண்மையினை கையாளுதல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல்கள் பொருத்துதுல் , பாதுகாப்பான  வாகன நிறுத்துமிடங்களை அமைத்தல், கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்துதல், தெருவிளக்குகளை கண்காணிப்பு செய்தல் உள்ளிட்ட வசதிகளை கண்காணித்திட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  அறை அமைத்தல்  போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 
 
மேற்கூரிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக , தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மண் பரிசோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர், இரண்டாம் கட்டப் பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் என ஆணையாளர் தெரிவித்தார். பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆணையாளர், பேருந்து நிறுத்தங்களில் கான்கிரீட் தளம்  அமைக்கப்படவுள்ள இடங்களையும் , வாகன நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டார்.  
 
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி பொறியாளர் திரு.எம். சுமதி, திரு.கே. செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 
 
 
 
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.