செய்தி வெளியீடு எண் : 149 நாள் : 10.11 .2017 தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் பல்துறை சிறப்பு மருத்துவ சேவைகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 149 நாள் : 10.11 .2017 தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் பல்துறை சிறப்பு மருத்துவ சேவைகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி , சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும்   ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் பல்துறை சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகள்  தகுந்த நேரத்தில் வழங்குவதற்காக, சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 25 ல் பள்ளப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,   அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 14 ல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,  அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 40 ல் அண்ணா மருத்துவமனை,  கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 ல் அன்னதானப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் திங்கள் கிழமை முதல்  வெள்ளிக்கிழமை வரை  இச்சிறப்பு பல்துறை மருத்துவ சேவைகள் சிறப்பு மருத்துவர்களால் கீழ்க்கண்டவாறு  வழங்கப்படும்.  
 
நாள் :  வழங்கப்படும் சிறப்பு  சிகிச்சை விபரங்கள் நேரம்
திங்கள் கிழமை பொது மருத்துவம் மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை 
செவ்வாய் கிழமை மகப்பேறு மருத்துவம் மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை
புதன் கிழமை குழந்தைகள் நல மருத்துவம் மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை
வியாழக்கிழமை எலும்பு நோய் மருத்துவம் மற்றும்  இயங்கியல் (பிசியோதெரபி) மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை
 
 
 
 
 
வெள்ளிக்கிழமை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை கண் மருத்துவம்
 
 
 
 
மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரை
மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை பல் மருத்துவம்
மாதத்தின் மூன்றாம்  வெள்ளிக்கிழமை – காது, மூக்கு , தொண்டை மருத்துவம்
மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை – தோல் மருத்துவம் 
 
 
எனவே சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 
-----------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.