செய்தி வெளியீடு எண் : 147 நாள் : 08.11 .2017

செய்தி வெளியீடு எண் : 147 நாள் : 08.11 .2017

      
      
கே.பி. கரடு பகுதியிலிருந்து பூலாவரி ஏரியை சென்றடையும் ராஜவாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி
 தூர்வாரும் பணிகளை 
மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 ல் கே.பி. கரடு பகுதியிலிருந்து , ரெங்காபுரம் வழியாக பூலாவரியை சென்றடையும் ராஜவாய்க்காலில்  பிளாஸ்டிக் கழிவுகளை  அகற்றி, தூர்வாறும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 08.11.2017 அன்று ஆய்வு செய்தார்.  
கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50 ல் கே.பி. கரடு பகுதியிலிருந்து  ராஜவாய்க்கால் ஒடை கோட்டம் எண் 51 ல் ரெங்காபுரம் வழியாகவும்,  கோட்டம் எண்  52 ல் மார்க்கெட் இட்டேரி ரோடு வழியாக நாட்டாமங்கலம் பிரிவு ரோடை சென்றடைந்து, அங்கிருந்து அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி வழியாக நெய்க்காரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடிகாடு ஏரியை சென்றடைந்து, அதன் பின்னர் வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பூலாவரி ஏரியை சென்றடைகிறது.  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவ்வோடை கடந்து செல்லும் இடங்களில், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை முழுவதுமாக அகற்றி, இவ்வாய்க்காலை தூர்வாரி மழை நீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர் குறிப்பிட்ட கால அளவிற்குள் பணிகளை மேற்கொண்டு, மழை நீர் முறையாக செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  
பின்னர் கோட்டம் எண் 51 ல் ரெங்கதாஸ் தெரு, அம்பேத்கார் தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகியவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் , கோட்டம் எண் 56 ல் கருங்கல்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார். பின்னர்  கோட்டம் எண் 57   களரம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை ஆய்வு செய்த ஆணையாளர் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 44 ல் எருமாபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் ஆய்வு செய்தார்.  
இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர் திரு.மு. கணேசன், உதவி செயற்பொறியாளர் திரு.எம். செந்தில் குமார், உதவி பொறியாளர் திரு.ஜெ. ஓபுளி சுந்தர், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். 
-----------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.