செய்தி வெளியீடு எண் : 144,நாள் : 03.11 .2017 சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் மாநகராட்சி குகை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

செய்தி வெளியீடு எண் : 144,நாள் : 03.11 .2017 சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் மாநகராட்சி குகை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

 சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 54 ல் மாநகராட்சி குகை ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.சக்திவேல் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் 03.11.2017 அன்று  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும்  மாணவ , மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வெளியிடப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில் மாநகராட்சி குகை ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் உருவாகும் முறை மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்த விளக்கங்கள் ஆணையாளரால்  மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் மற்றும்  மாணவ, மாணவியர்கள்  பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கும், டெங்கு பரவாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிப்பதற்கு ஏதுவாக, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் , துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1,500க்கும்  மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  முன்னதாக 236 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்பட்டது.  
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.அ.அசோகன், மருத்துவ அலுவலர் மரு. சித்ரா பவானி, பள்ளி தலைமை ஆசிரியர் திரு.எம். பனிமேதாஸ் , உதவி தலைமை ஆசிரியர் திரு.வி. மோகன சுந்தரம்  , சுகாதார அலுவலர் திரு.எம். சேகர், சுகாதார ஆய்வாளர் திரு.டி. ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.