செய்தி வெளியீடு எண் : 145 நாள் : 03.11 .2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் வணிக ரீதியிலான குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள் 20.11.2017 க்குள் நவீன அளவு மானிகளை (ளுஅயசவ ஆநவநசள) பொருத்திட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

செய்தி வெளியீடு எண் : 145 நாள் : 03.11 .2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் வணிக ரீதியிலான குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள் 20.11.2017 க்குள் நவீன அளவு மானிகளை (ளுஅயசவ ஆநவநசள) பொருத்திட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  வணிக ரீதியிலான குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள் 20.11.2017 க்குள் நவீன அளவு மானிகள் (ளுஅயசவ ஆநவநசள)  பொருத்தி,  பயன்படுத்தும் அளவிற்கான குடிநீர் வரியினை செலுத்திடுமாறு  மாநகராட்சி ஆணையாளர்  திரு.ரெ. சதீஷ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
  சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் 103 மில்லியன் லிட்டரும், நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 10 மில்லியன் லிட்டர் என நாளொன்றுக்கு 113 மில்லியன் லிட்டர் குடிநிர் விநியோகம் செய்யப்பட்டு  வருகிறது.  சேலம் மாநகரில் வணிக ரீதியிலான இணைப்புகள் 1,387  உள்பட மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.    மேலும்  6,970 பொது குழாய்கள் மற்றும் 3,068 ஆழ் துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
 
சேலம் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து,  குடிநீர் வழங்கல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தி, மாநகர பொது மக்கள்  அனைவருக்கும் நாள் 1 க்கு தேவையான குடிநீர் அளவினை நவீன அளவு மானிகள் (ளுஅயசவ ஆநவநசள)  பொருத்தி, சீரான அளவில் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வணிக ரீதியிலான இணைப்புகள் பெற்றவர்கள்,  தங்களது சொந்த செலவில் ஐ.எஸ்.ஐ. (இந்திய தரச்சான்றிதழ்  பெற்ற நிறுவனங்கள்) மூலம் தயாரிக்கப்பட்ட நவீன அளவு மானிகளை (ளுஅயசவ ஆநவநசள)  20.11.2017 க்குள்   மாநகராட்சி அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் , குடிநீர் குழாய்களில் பொருத்திக் கொள்ள வேண்டும்.  நவீன அளவு மானி (ளுஅயசவ ஆநவநசள)  யில்  குறிப்பிடப்படும் பயன்பாட்டின் அளவிற்கான தொகையினை மட்டும் செலுத்தினால் போதுமானது.  எனவே வணிக ரீதியிலான இணைப்பு பெற்றவர்கள், நவீன அளவு மானி (ளுஅயசவ ஆநவநசள)  பொருத்தும் பணிகளை உடனடியாக பொருத்த வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
-------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.