செய்தி வெளியீடு எண் : 162, நாள் : 11.12.2017 ஸ்வச் சர்வேக்சன் - 2018 என்னும் தூய்மை நகர கணக்கெடுப்பு ஜனவரி 2018 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளது சேலம் மாநகராட்சி சிறந்த நகரமாக தேர்வு செய்யப்படுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள¦ வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் : 162, நாள் : 11.12.2017 ஸ்வச் சர்வேக்சன் - 2018 என்னும் தூய்மை நகர கணக்கெடுப்பு ஜனவரி 2018 முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளது சேலம் மாநகராட்சி சிறந்த நகரமாக தேர்வு செய்யப்படுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள¦ வேண்டுகோள்

மத்திய அரசு இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்களை கணக்கெடுத்து,  சிறந்த    நகரங்களாக தேர்வு செய்யப்படும் பகுதிகளுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுவதற்கு பரிசுத் தொகையினையும் வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி  வருகிறது.  அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள் ஜனவரி - 2018 ல் துவங்கி, மார்ச் மாதம் 2018 வரை நாடெங்கிலும் நடைபெற உள்ளது.  இப்போட்டியில் சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்படுவதற்கு  பல்வேறு அளவுகோல்கள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரித்து,  திறந்த வெளியில் பொதுமக்கள் மலம், சிறுநீர் கழிக்காமலிருப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்பான தனி நபர் கழிப்பிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைத்து, வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை இரு வண்ணக்கூடைகளில்  தரம் பிரித்து  பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  மேலும் நாளொன்றுக்கு  100 கிலோவிற்கு மேல் குப்பைகள் உருவாக்கும் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் , அடுக்குமாடி குடியிருப்புகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து, அவற்றிலிருந்து உரம் தயாரிப்பது மற்றும் எரிவாயு உற்பத்தி செய்வது போன்ற  நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தகுந்த அறிவுரைகளை வழங்கி வருகிறது.  

மேலும் சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில்  சுகாதார மேம்பாட்டு பணிகளை ஒரு மக்கள்  இயக்கமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.  அதனடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,  பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு சிறப்புக் குழுக்கள் அமைத்து,   அக்குழுவினர் மூலம் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதோடு ஸ்வச் சர்வேக்சன் - 2018 தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்படும். இக்குழுவினர்   தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து இரு வண்ண கூடைகளில்  வழங்குவதற்கும்,   பொது இடங்களில் சுகாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்வச்சதா செயலியினை  பொதுமக்களை தங்களது ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் சுகாதார குறைபாடுகளை சரி செய்வதற்கு தேவையான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்வர். பொதுமக்களை வீடுகளில்  கழிவறைகளை பயன்படுத்துவதற்கும் , கழிவறை வசதி இல்லாதவர்களுக்கு அரசின் உதவியோடு கழிவறைகளை அமைத்து தருவதற்கும் மற்றும் ஒருங்கிணைந்த  சுகாதார  வளாகத்தை பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களையும் இக்குழுவினர் மூலம்  மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். 
 
தூய்மை நகர கணக்கெடுப்பின் போது பொது சுகாதாரம் குறித்து பொதுமக்களிடம்  ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, குடியிருப்பு பகுதிகள்  பராமரிக்கப்படும் முறைகள் ,   திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு, பொது இடங்களில் உள்ள சுகாதார மேம்பாடு, கழிப்பறைகளின் பயன்பாடு  ஆகியவை  ஆய்வு மேற்கொள்ளும் குழுவினரால் பரிசீலிக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது சுகாதார மேம்பாடு கருதி, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, அகில இந்திய அளவில் நடைபெறும் தூய்மை நகர கணக்கெடுப்பில் சேலம் மாநகராட்சி சிறந்த நகரமாக  தேர்வு செய்யப்படுவதற்கு ஏதுவாக,   சுகாதார மேம்பாட்டு பணிகளை  தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.