செய்தி வெளியீடு எண் : 143 நாள் : 02.11 .2017 சூரமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட வீடுகளில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் 04.11.2017 , 05.11.2017 மற்றும் 06.11.2017 ஆகிய 3 நாட்கள் தீவிர துப்புரவு பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் : 143 நாள் : 02.11 .2017 சூரமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட வீடுகளில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் 04.11.2017 , 05.11.2017 மற்றும் 06.11.2017 ஆகிய 3 நாட்கள் தீவிர துப்புரவு பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

பருவ நிலை மாற்றத்தினை தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளும் தினந்தோறும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திடும் பொருட்டு, (04.11.2017) சனிக்கிழமை, (05.11.2017) ஞாயிற்றுக்கிழமை  மற்றும் (06.11.2017) திங்கட் கிழமைகளில் பொதுமக்களே தங்களது வீடுகளில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மைப்படுத்துவதோடு   மட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் 04.11.2017  அன்று (சனிக்கிழமை )  சூரமங்கலம்  மண்டலம் கோட்டம் எண்  1, 18,20,25,26 மற்றும் அம்மாப்பேட்டை  மண்டலத்தில் கோட்டம் எண் 10,36,38,41,42  ஆகிய பகுதிகளுக்கு   காலை 8.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை குடிநீர் வழங்கல் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் நண்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கூரிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

 
05.11.2017  அன்று (ஞாயிற்றுக்கிழமை)  சூரமங்கலம்  மண்டலம் கோட்டம் எண்  2, 3, 24, 28 மற்றும் அம்மாப்பேட்டை  மண்டலத்தில் கோட்டம் எண் 9,32,33,34,43  ஆகிய பகுதிகளுக்கு   காலை 8.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை குடிநீர் வழங்கல் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் நண்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கூரிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

06.11.2017  அன்று (திங்கட் கிழமை)  சூரமங்கலம்  மண்டலம் கோட்டம் எண்  19,21,22,23,27 மற்றும் அம்மாப்பேட்டை  மண்டலத்தில் கோட்டம் எண் 11,35,37,39,40, 44 ஆகிய பகுதிகளுக்கு   காலை 8.00 மணி முதல் நண்பகல் 2.00 மணி வரை குடிநீர் வழங்கல் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் நண்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கூரிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.

இந்த கால இடைவெளியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , குடிநீர் தேக்கி வைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டிரம்கள், குடங்கள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வீடுகளின் உட்புறம், வெளிப்புறம் மற்றும்  சுற்றுப்புறங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் பயனற்று கிடக்கும்  பிளாஸ்டிக் போன்ற தேவையற்ற பொருட்கள், பயன்படாத டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தி,  செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றிடும் பொதுமக்களுக்கு உதவுவதற்கு மாநகராட்சி பணியாளர்கள் / அலுவலர்கள் வீடுகளுக்கு வருகை புரிவார்கள்.   எனவே பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

-------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.