செய்தி வெளியீடு எண் : 163, நாள் : 11.12.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் (13.12.2017 ) மற்றும் (14.12.2017) ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக குடிநீர் விநியோகம் நிறுத்தம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர்  வழங்கி வரும் மேட்டூர் தொட்டில்பட்டியில் (13.12.2017) அன்று    தமிழ்நாடு   மின்சார வாரியத்தால்  பராமரிப்பு  பணிகள்   மேற்கொள்ள உள்ளாதாலும்,  (14.12.2017) தனிக் குடிநீர் திட்டத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாலும் (13.12.2017) புதன் கிழமை மற்றும் (14.12.2017) வியாழக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 
எனவே    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.