செய்தி வெளியீடு எண் : 141, நாள் : 30.10 .2017 நேர்மை உறுதிமொழி மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது

செய்தி வெளியீடு எண் : 141, நாள் : 30.10 .2017 நேர்மை உறுதிமொழி மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது

சேலம் மாநகராட்சி மைய அலுவலத்தில் தூய்மையே சேவை உறுதிமொழி 15.9.2017 அன்று தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
பின்னர் ஆணையாளர் தெரிவித்ததாவது : -
 
செப்டம்பர் 15.9.2017  முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான  அக்டோபர் 2-ம் தேதி வரை சேலம் மாநகராட்சி பகுதிகளில் ‘தூய்மையே சேவை’  இயக்கப் பணிகள்  நடைபெற உள்ளது.  பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் போன்ற பொது இடங்களை  தூய்மை படுத்துதல்  வீடுகளில் கழிப்பறைகள் கட்டாதவர்களை கண்டறிந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி , கழிப்பறைகளை கட்ட வைப்பது மற்றும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை அறவே தடுப்பது, போன்ற பணிகள் இவ்வியக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.  
திடக்கழிவு மற்றும்   திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவது  தொடர்பான பணிகளும் இக்காலக்கட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.  
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன்,  திரு.ஜி. காமராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன் , உதவி ஆணையாளர்கள்  திரு.க.ராஜா , திருமதி.டி. ரங்கநாயகி,  மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.