செய்தி வெளியீடு எண். 140, நாள்: 30.10. 2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு வியாபார பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

செய்தி வெளியீடு எண். 140, நாள்: 30.10. 2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு வியாபார பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்-47-ல் சின்னப்பன்தெரு, சோனாசலம் தெரு, ரங்கசாமி தெரு, பெருமாள் தெரு, பாரதி தெரு, வெங்கட்ராமன் தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை 30.10.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர். திருமதி. ரோஹிணி  ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 

இப்பகுதியில் உள்ள தேநீர் விடுதிகள், மளிகை கடைகள், பேக்கரிகள் மற்றும் குடியிருப்புகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், தேநீர் விடுதிகள் மற்றும் மளிகை கடைகளுக்கு பொது மக்கள் தினந்தோறும் அதிக அளவில் வருகை புரிவதால், கடைகளில் உள்ள குளிர்சாதனப்பெட்டிகளை தினந்தோறும்  சுத்தப்படுத்துவதோடு, காலியான குளிர்பான பாட்டில்கள், பன்படுத்தப்பட்டபின் காலியாக உள்ள  ஐஸ்கிரீம் டப்பாக்காள் போன்றவற்றை முறையாக சேகரித்து  அவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.  குறிப்பாக ஐஸ்கிரீம் கடைகளுக்கு அதிக அளவில் குழந்தைகள் வந்து செல்வதால்,  ஐஸ்கிரீம் கடை உரிமையாளர்கள் மிகவும் கவனத்தோடு தங்களது வியாபார இடங்களை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

சேலம் மாநகராட்சி நிர்வாகம் தினந்தோறும் டெங்கு தடுப்பு  மற்றும் விழிப்புணர்வு பணிகளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.  அதனடிப்படையில் தீவிர துப்புரவு பணிகள் மருந்து தெளிப்பு பணிகள் கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றிடும் பணிகள் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகள் மற்றும் பேக்கரிகளிலிருந்து கிடைக்கப்பெறும் திடக்கழிவுகளை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைதொட்டியில்தான் போட வேண்டும்.  வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் திடக்கழிவுகளின் எடையின் அளவு கடந்த ஒரு வார காலத்தில் அதிகரித்துள்ளது.  இந்நிலையில் தினந்தோறும் தங்களது வளாகங்களை தூய்மைப்படுத்தி கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை வியாபார பெருமக்கள் தடுத்து மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார். பின்னர் வீடுகளுக்குள் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சிய, வெகு நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்தால்  உறவினர்கள் மூலம் பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் துப்புரவு பணி மேற்கொள்ள வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார். 
 இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர், திரு. எம். கணேசன், மாநகர நல அலுவலர், மரு. வி. பிரபாகரன், உதவி பொறியாளர்கள் திரு. ஜே. ஓபுளி சுந்தர், திரு. ஆர். ரவிச்சந்திரன்  சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள்  ஆகியோர் உடனிருந்தனர்.