செய்தி வெளியீடு எண் :136, நாள் : 27.10.2017 சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்குட்பட்ட 20 கோட்டங்களில் மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என 1,638 பேர் கொண்ட 200 குழுவினர் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் தீவிர விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் :136, நாள் : 27.10.2017 சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்குட்பட்ட 20 கோட்டங்களில் மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என 1,638 பேர் கொண்ட 200 குழுவினர் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் தீவிர விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்குட்பட்ட 20 கோட்டங்களில்  மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என  1,535 பேர் கொண்ட  200 குழுவினர் மூலம்  டெங்கு தடுப்பு மற்றும்  தீவிர  விழிப்புணர்வு பணிகளை கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் 27.10.2017 அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  துவக்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் , மழைக்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார மேம்பாட்டு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.  ஏற்கனவே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் அனைத்து கோட்டங்களிலும் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்பணிகளின் போது வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், விழிப்புணர்வு பணிகளையும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக பொதுமக்கள் தண்ணீர் சேகரித்திட பயன்படுத்தும் பிளாஸ்டிக் டிரம்கள், பாத்திரங்கள் போன்றவற்றை தூய்மைப்படுத்துவதோடு , வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் டெங்கு தடுப்பு மற்றும்  தீவிர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலம் எண் 2,3,8,19,21 ஆகிய கோட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியர்கள் , செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள்  என 500 பேர் கொண்ட குழுவினரும், அஸ்தம்பட்டி மண்டலம் 4, 5, 6, 8, 29 ஆகிய கோட்டங்களில் கல்லூரி மாணவ , மாணவியர்கள் , செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள்  என 375 பேர் கொண்ட குழுவினரும்,அம்மாபேட்டை மண்டலம் 36,37,38,41,42 ஆகிய கோட்டங்களில்  கல்லூரி மாணவ , மாணவியர்கள் , செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள்  என 333  பேர் கொண்ட குழுவினரும், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50,55,58,59,60 ஆகிய கோட்டங்களில்  கல்லூரி மாணவ , மாணவியர்கள் , செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள்  என  430 பேர் கொண்ட குழுவினர் என மொத்தம் 1,638 பேர் கொண்ட குழுவினர் 20 கோட்டங்களில் தீவிர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுகிறார்கள்.  

விநாயகா மிஷின் மருத்துவக் கல்லூரி, கமலா செவிலியர் பயிற்சி கல்லூரி, புனித போனி ஒயிட் செவிலியர் பயிற்சிக் கல்லூரி , ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பத்மாவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி , கொங்கு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரி,  அம்மாபேட்டை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பாவடி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, குகை மூங்கப்பாடி பெண்கள் மேல் நிலைப் பள்ளி, கொண்டலாம்பட்டி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றின் மாணவ, மாணவியர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று வீட்டின் கதவுகள் , சமையலறை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் தூய்மைப்படுத்துவது தொடர்பான ஒட்டு வில்லைகளை ஒட்டி, பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை எடுத்துக் கூறுவார்கள். இக்குழுவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி மரு. ஆர். வைத்தியநாதன் இ.ஆ.ப., 
உதவி ஆணையாளர் திரு.மு. கணேசன், மாநகர நல அலுவலர் மரு. வி.பிரபாகரன், சேலம் தெற்கு வட்டாட்சியர் திருமதி. கே. பத்மப்பிரியா, விநாயகாமிஷின் மருத்துவக் கல்லூரி மருத்துவர் மரு. எம்.கே. செல்வகளஞ்சியம், உதவி செயற்பொறியாளர் திரு.ஆர். செந்தில் குமார், தாய் சேய் நல அலுவர் திருமதி. என். சுமதி, சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.