செய்தி வெளியீடு எண் :135, நாள் : 26.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய திரையரங்கு, திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு 26.10.2017 அன்று ரூ.4 இலட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிப்பு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :135, நாள் : 26.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய திரையரங்கு, திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு 26.10.2017 அன்று ரூ.4 இலட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிப்பு மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி  4 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தனியார் நிறுவனங்களில்  முறையாக மேற்கொள்ளப்படுகிறதா,  என 26.10.2017 அன்று  அலுவலர்கள் / பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 1  ல் எம்.எஸ். வி. திருமண மண்டப வளாகத்தில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 2 இலட்சம் அபராதமும் , கோட்டம் எண்  23 ல் கீர்த்தனா திரையரங்கு வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ  50 ஆயிரம்  அபராதமும் , ஜி.வி. என் திருமண மண்டப வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 10 ஆயிரம் அபராதமும்  , திரு. ராமநாதன் என்ற தனிநபருக்கு சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 10 ஆயிரம் அபராதமும் , கோட்டம் எண் 27 ல் திரு. குரு  என்பவருக்கு சொந்தமான கடையில் சுகாதார மேம்பாட்டிற்கு குந்தகம் விளைவித்ததற்காக ரூ. 5 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ. 2 இலட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 5 ல் உள்ள சாரதா வித்யா பால மந்திர் மகளிர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 10 ஆயிரம்   அபராதமும், ஜெயசூர்யா பல்பொருள் அங்காடியில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறிந்து ரூ 10 ஆயிரம் அபராதமும்  என மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
அம்மாபேட்டை மண்டலத்தில் கோட்டம் எண் 32 ல் வாசவி திருமண மண்டப வளாகத்தில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரம் அபராதமும்,  வசந்த் திருமண மண்டப வளாகத்தில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரம்  அபராதமும் என மொத்தம் ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 51  ல் அரசு உதவி பெறும் சௌடேஷ்வரி கல்லூரி வளாகத்தில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 20 ஆயிரம்  அபராதமும், அந்த கல்லூரியின் உணவகத்தில்  பொதுசுகாதாரத்தில் குந்தகம் விளைவித்தற்காக ரூ 2 ஆயிரம் என ரூ. 22 ஆயிரமும்,  கோட்டம் எண் 50 ல் தரணி சோப்பு கம்பெனியில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 20 ஆயிரமும்  , மேலும் வேலு மாவு கடையில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 5  ஆயிரமும், வெடி மருந்து தெருவில் வாசு என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணியிடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு  ரூ. 2 ஆயிரத்து 500 அபராதமும், கோட்டம் எண் 59 ல்  திரு. சேது என்பவருக்கு சொந்தமான கடையில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ. 2 ஆயிரத்து 500    அபராதம்  என மொத்தம் ரூ. 52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  4 மண்டலங்களிலும்   26.10.2017 அன்று ஒரு நாள் மட்டும்  ரூ. 4  இலட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.