செய்தி வெளியீடு எண் :133, நாள் : 26.10.2017 பொது மக்களின் ஒத்துழைப்பின்றி டெங்கு தடுப்பு பணிகள் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப, அவர்கள் வேண்டுகோள்.

செய்தி வெளியீடு எண் :133, நாள் : 26.10.2017 பொது மக்களின் ஒத்துழைப்பின்றி டெங்கு தடுப்பு பணிகள் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப, அவர்கள் வேண்டுகோள்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 54 கோகுல விலாஸ் பாடக சாலை, சஞ்சீராயன்பேட்டை , கோட்டம் எண் 55 மாரியம்மன் கோவில் தெரு, முனியப்பன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப.,   அவர்கள் 26.10.2017 அன்று  ஆய்வு செய்தார். 

மாவட்ட ஆட்சித் தலைவர்  வீடுகளுக்குள் சென்று, பொதுமக்கள் தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் குடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது சில வீடுகளில் கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவற்றை உடனடியாக சுத்தப்படுத்திட,  மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் தங்களது வீடுகளை தூய்மையான பகுதிகளாக கருதி, டெங்கு தடுப்பு பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும், வீடுகளுக்குள்  டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்யெனில், அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை , பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினசரி மாநகராட்சி   முழுவதும் மேற்கொள்ளப்படும்  அனைத்து டெங்கு தடுப்பு பணிகளும் ,  உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் தெரிவிக்கும் குறைபாடுகளையும் உடனடியாக சரிசெய்திட , தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மாநகர்  முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளை இடைவிடாது, மேற்கொண்டு வரும் நிலையில்,  இப்பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி டெங்கு தடுப்பு பணிகள் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் , மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்தார். 

மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுபவர்கள் , மலேரியா தடுப்பு பணியாளர்கள் மற்றும்  துப்புரவு பணியாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் , எந்த தொய்வுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறும் வகையில் இணக்கமாக பணியாற்ற வேண்டும். மேலும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை, பொதுமக்களுக்கு எளிய வகையில் எடுத்துக் கூறி,  அவர்களையும் டெங்கு தடுப்பு பணிகளில் ஆர்வமாக பங்கேற்கும் வகையில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார். 

இவ்வாய்வின்போது உதவி ஆணையாளர் திரு.மு. கணேசன், மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் திரு.ஆர். செந்தில் குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் ,  சுகாதார அலுவலர் திரு.எம். சேகர் சுகாதார ஆய்வாளர்கள் திரு.எம். சித்தேஸ்வரன், திரு.டி. ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.