செய்தி வெளியீடு எண் :134 ,நாள் : 26.10.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

செய்தி வெளியீடு எண் :134 ,நாள் : 26.10.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 4 ல் அழகாபுரம் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப்பள்ளியில் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.சக்திவேல் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தலைமையில் 26.10.2017 அன்று  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பருவ நிலை மாற்றத்தால் சேலம் மாநகர பொது மக்கள் நலன் கருதி, டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் பொது மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பள்ளி மாணவ , மாணவியர்கிளைடையே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வெளியிடப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில் ஹோலி ஏஞ்சல்ஸ் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் உருவாகும் முறை மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்த விளக்கங்கள் ஆணையாளரால்  மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர்  அவர்களது பெற்றோர்களிடம் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கும், டெங்கு பரவாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிப்பதற்கு ஏதுவாக, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் , துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  அனைத்து மாணவியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர்  திரு.நா. சத்தியநாராயணன், மருத்துவ அலுவலர் திருமதி செ. கீர்த்தனா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோலி ஜோசப் , தாய் சேய் நல அலுவலர் திருமதி என். சுமதி ,  சுகாதார அலுலவர் திரு. கே. சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.