செய்தி வெளியீடு எண் :132, நாள் : 25.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய தனியார் பேருந்து / லாரி பணிமனை, மருத்துவமனைகள், உணவகங்கள், கல்லூரி , ஆகியவற்றிற்கு 25.10.2017 அன்று ரூ.41 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :132, நாள் : 25.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய தனியார் பேருந்து / லாரி பணிமனை, மருத்துவமனைகள், உணவகங்கள், கல்லூரி , ஆகியவற்றிற்கு 25.10.2017 அன்று ரூ.41 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி  4 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தனியார் நிறுவனங்களில்  முறையாக மேற்கொள்ளப்படுகிறதா,   என்று ஆய்வு செய்யப்பட்டதில் 25.10.2017 அன்று சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 ல் உள்ள ஸ்ரீ சைதன்யா என்ற தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டறிந்த , மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள்  ரூ. 2 இலட்சம் அபராதத் தொகை விதித்தார். மேலும் மாநகராட்சி அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டதில் கோட்டம் எண் 18 ல் உள்ள ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை வளாகத்தில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரமும் , ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 2 இலட்சம் மற்றும் கோட்டம் எண் 3 ல் உள்ள  ஹோட்டல் சிங் சாரல் வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 4 இலட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 15  எல்.ஆர்.என். தனியார் பேருந்து / லாரி  நிறுவனத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்  பழுதான லாரிகள், விபத்துக்குள்ளான கார்கள்  போன்றவற்றில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறிந்து ரூ. 15 இலட்சம்  அபராதம் விதித்தார்.  மேலும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், கோட்டம் எண் 17 ல் வசந்தம் ஹோட்டல் வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 5 இலட்சம்  என மொத்தம் ரூ. 20 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
அம்மாபேட்டை மண்டலத்தில் கோட்டம் எண் 9 ல் உள்ள  ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில்,  கல்லூரி வளாகம் மற்றும்  உணவகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 10 இலட்சம் அபராதமும் மேலும் , களரம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஏ.கே.எஸ். சினி காம்ப்ளக்ஸில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 5 இலட்சம் என மொத்தம் ரூ. 15 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 45 ல் உள்ள சண்முகா லாட்ஜ் , சித்தார்த் லாட்ஜ் மற்றும் சிவக்குமார் அன்ட் கோ டயர் கம்பெனி ஆகிய இடங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ. 25 ஆயிரம் வீதம்  3 நிறுவனங்களுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதமும்,  எம்.எம். சாலையில் உள்ள திரு. சித்துராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரம் அபராதம்  என 25.10.2017 அன்று 4 மண்டலங்களில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாதவர்களுக்கு  ரூ. 41 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.