செய்தி வெளியீடு எண் :130,நாள் : 24.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய மருத்துவமனைகள்,சமையல் எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு 24.10.2017 அன்று ரூ. 2 இலட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 4 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்களால் , டெங்கு தடுப்பு பணிகள் தனியார் நிறுவனங்களில்  முறையாக மேற்கொள்ளப்படுகிறா  என்று ஆய்வு செய்யப்பட்டதில் , 24.10.2017 அன்று சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 24 ல் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட புரோபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு ரூ. 50 ஆயிரமும், புளு டாட் கொரியர் நிறுவனத்திற்கு ரூ. 50 ஆயிரமும், சிசு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் என 1 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
அம்மாபேட்டை மண்டலத்தில் கோட்டம் எண் 37 கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட எஸ்.எஸ்.  பர்னிச்சர் கடைக்கு ரூ. 10 ஆயிரமும், கோட்டம் எண் 32 ல் மோகன் உணவகத்துக்கு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 5 கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட வெங்கடேஷ்வரா சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம், சேர்வராயன் சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு ரூ. 10  ஆயிரம் மற்றும் கோட்டம் எண் 14 ல் உள்ள வன்னியர் குல ஷத்திரியர் திருமண மண்டபத்துக்கு ரூ. 10 ஆயிரம் என ரூ. 25 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டது. 
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 60 கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரமும், கோட்டம் எண் 59 ல் திரு. செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான காலிமனையிடத்தில் தேங்கியிருந்த மழைநீரினை அப்புறப்படுத்தாமல் இருந்ததற்காக, ரூ. 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 70 ஆயிரம் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டது.  24.10.2017 அன்று 4 மண்டலங்களிலும் ரூ. 2 இலட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.