Commissioner Inspection in New Bus Stand

Commissioner Inspection in New Bus Stand

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில்
டெங்கு  நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என
தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்
அவர்கள்  ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்கள் , குளிர்பான கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை  தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் 15.7.2017 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக வழங்கப்படுகிறதா, சமையலறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா   எனவும் மேலும் குடிநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் டிரம்கள் ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு  செய்தார். குளிர்பான கடைகள் , தேநீர் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் , உணவுப் பொருட்கள் , குளிர்பானங்கள் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்த ஆணையர் சம்பந்தப்பட்ட உணவகங்கள் , தேநீர் கடைகள் மற்றும் குளிர்பான கடை நடத்துவோரிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட வேண்டும் அதிக நாட்கள் குடிநீரை தேக்கி  வைத்தால்  டெங்கு  நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தங்கள் வியாபாரம் மேற்கொள்ளும் இடங்களை தூய்மையாகவும், பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் குளிர்பானக் கடைகளில் உள்ள உணவுக்கழிவுகளை தேக்கி வைக்காமல், உரிய கால இடைவெளியில் அவற்றினை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும் நீண்ட நாட்களுக்கு குடிநீர் சேமித்து வைக்காமலும் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள் ஆகியவற்றை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.  புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் டெங்கு நோய் தடுப்பு பணிகள் மற்றும் பிற சுகாதார பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொண்டார். மேலும் மாநகராட்சியின் அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளி வரும் பகுதியில்  இருந்து மெய்யனூர் செல்லும் சாலையில்   உள்ள கழிவு நீர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை நகர் பகுதியில் கழிவு நீர் ஓடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும்  பணிகளையும்    ஆய்வு செய்த ஆணையர் தூர்வாரும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஜி.காமராஜ் , உதவி ஆணையாளர்கள் திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திருமதி வி. திலகா, சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.