செய்தி வெளியீடு எண் :127,நாள் : 23.10.2017 சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் :127,நாள் : 23.10.2017 சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  பல்வேறு நிலைகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் கொண்டலாம்பட்டி  மண்டலம் குகை நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 2700 மாணவியர்கள் பங்கேற்ற,  டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் 23.10.2017 அன்று  துவக்கி வைத்தார்.

இப்பேரணி குகை நகரவை மகளிர் மேல் நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி, குகை மாரியம்மன் கோவில் வழியாக திருச்சி மெயின் ரோட்டை சென்றடைந்து, அங்கிருந்து அப்சரா ரோடு வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.  மாணவியர்கள் பொதுமக்களிடம் வீடுகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, தேவையற்ற பொருட்களை வீடுகளிலிருந்து அப்புறப்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது போன்ற விவரங்களை தெரிவித்தனர். மேலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி. சக்திவேல் , மாவட்ட முதன்மை அலுவலர் திருமதி.அ. ஞான கௌரி , செயற்பொறியாளர் அ. அசோகன் , உதவி ஆணையாளர் திரு. மு. கணேசன்,  உதவி செயற்பொறியாளர் திரு.எம். செந்தில் , உதவி தலைமை ஆசிரியர் திரு. டி. ஸ்ரீராம், ஆசியர்கள் திருமதி. கே. விமலா திருமதி எஸ். சாரதாள் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.