செய்தி வெளியீடு எண் :126, நாள் : 23.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய திரையரங்கு, பல்தொழில்நுட்பக் கல்லூரி , எரிபொருள் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) ஆகியவற்றிற்கு ரூ. 6 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

செய்தி வெளியீடு எண் :126, நாள் : 23.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய திரையரங்கு, பல்தொழில்நுட்பக் கல்லூரி , எரிபொருள் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) ஆகியவற்றிற்கு ரூ. 6 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6 கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் 23.10.2017 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது திரையரங்கு வளாகத்தில் தீ தடுப்பு பணிகளுக்காக தண்ணீர்  தேக்கி வைக்கும் தொட்டி, கழிவறைகளில் உள்ள தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள் ஆகியவற்றில்   கொசுப்புழுக்கள் இருப்பது ஆணையாளரின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனைத்  தொடர்ந்து ரூ 2 இலட்சம் அபராதத் தொகையினை இத்திரையரங்கிற்கு  விதித்து உத்தரவிட்டார். 
மேலும் ஆணையாளர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டடதில், அம்மாபேட்டை மண்டலம் 10 வது கோட்டத்தில் டிஸ்கவரி இந்தியா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ. 50 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.   மேலும் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் 15 ல் உள்ள சுப்புராய  பிள்ளை பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு. ரூ. 1 இலட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டது.  அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 13 ல் உள்ள சேலம் ப்யூயல்ஸ் பெட்ரோல் பங்க்கில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு. ரூ. 2.5  இலட்சம் அபராதம் என  மொத்தம் ரூ. 6 இலட்சம் அபராதம்  விதிக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது : -
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் , மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் , உணவகங்கள், தனியார் பேருந்து மற்றும் லாரி பணிமனைகள், தேநீர்  விடுதிகள், தனியார் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளி வளாகங்கள், பேக்கரிகள், பெட்ரோல் பங்க்குகள், வணிக நிறுவனங்கள்  மற்றும் திருமண மண்டபங்கள்   ஆகியவற்றை தூய்மையாக பராமரித்து, டெங்கு தடுப்பு பணிகளை முழுiயாக மேற்கொள்ள வேண்டும்.  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் பொது சுகாதார மேம்பாட்டிற்கு, குந்தகம் விளைவிப்போருக்கு சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.