செய்தி வெளியீடு எண் :128 , நாள் : 23.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய மருத்துவமனைகள்,திருமண மண்டபங்கள் திரையரங்கம், உணவகங்கள், எரிபொருள் நிலையம் (பெட்ரோல் பங்க்) தொழிற்பயிற்சி பள்ளி ஆகியவற்றிற்கு 23.10.2017 அன்று ரூ. 9 இலட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :128 , நாள் : 23.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய மருத்துவமனைகள்,திருமண மண்டபங்கள் திரையரங்கம், உணவகங்கள், எரிபொருள் நிலையம் (பெட்ரோல் பங்க்) தொழிற்பயிற்சி பள்ளி ஆகியவற்றிற்கு 23.10.2017 அன்று ரூ. 9 இலட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரி , பள்ளி வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் மாநகராட்சி அலுவலர்களால் தினசரி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் 23.10.2017 அன்று அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6 ல்  கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கில் தீ தடுப்பு பணிகளுக்காக தண்ணீர்  தேக்கி வைக்கும் தொட்டி, கழிவறைகளில் உள்ள தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள் ஆகியவற்றில்   கொசுப்புழுக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனைத்  தொடர்ந்து ரூ 2 இலட்சம் அபராதத் தொகை இத்திரையரங்கிற்கு  விதிக்கப்பட்டது. 
மேலும் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் 15 ல் உள்ள சுப்புராய  பிள்ளை தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு. ரூ. 1 இலட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டது.  அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 13 ல் உள்ள சேலம் ப்யூயல்ஸ் பெட்ரோல் பங்க்கில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு. ரூ. 2.5  இலட்சம் அபராதம் என  மொத்தம் ரூ. 5 இலட்சத்து 50 ஆயிரம்  அபராதம்  விதிக்கப்பட்டது. 
மேலும் அம்மாபேட்டை மண்டலம் 10 வது கோட்டத்தில் டிஸ்கவரி இந்தியா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ. 50 ஆயிரமும், கோட்டம் எண் 42 ல் குலாலர் திருமண மண்டபத்தில் உள்ள மேல் நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரமும், கோட்டம் எண் 42 ல் ஸ்ரீ ஜெயின் சேவா சமீதி டிரஸ்ட் திருமண மண்டபத்தில் நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 50 ஆயிரமும்,  கோட்டம் எண் 11 ல் உள்ள சரவணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூச்செடிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 10 ஆயிரமும்,  உணவகத்தில் உள்ள  பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் 1 இலட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  
சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண் 25 ல் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 1 இலட்சமும், கோட்டம் எண் 18 ல் ரிலையன்ஸ் வணிக வளாகத்தில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 1 இலட்சம் மற்றும் ஆர்.கே. மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததற்காக ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ரூ. 2 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 
மேலும் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 60 ல் மங்கள விலாஸ் ஹோட்டலில் குடிநீர் தேக்கி வைத்திருந்த பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ.   10 ஆயிரம் என 23.10.2017 அன்று ஒரு நாள் மட்டும்  ரூ. 9 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.