செய்தி வெளியீடு எண் :123, நாள் : 22.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய சண்முகா மருத்துவமனைக்கு ரூ. 10 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

செய்தி வெளியீடு எண் :123, நாள் : 22.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய சண்முகா மருத்துவமனைக்கு ரூ. 10 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 13 ல் உள்ள சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் 22.10.2017 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
இவ்வாய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய  தண்ணீர் தொட்டிகள், உடைந்த மருத்தவ பொருட்கள் மற்றும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில், கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  மேலும் தண்ணீர் தொட்டிகளில் விஷத்தன்மை உடைய பாம்பு இருப்பதும், ஆணையாளரின் ஆய்வில் கண்டறியப்பட்டது.  மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள், முறையாக அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகங்களிலும், அருகில் உள்ள ஓடையிலும் கொட்டப்பட்டிருந்தது.  
இதன் மூலம் இந்த மருத்துவமனை நிர்வாகம் சுகாதார மேம்பாட்டிற்கு, குந்தகம் விளைவிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யாத நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியினை தடுக்காததற்காக  ரூ. 5 இலட்சமும், அபாயகரமான மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டினை உருவாக்கியதற்காக ரூ. 5 இலட்சம் என மொத்தம் ரூ. 10 இலட்சம் அபராதம் மாநகராட்சி ஆணையாளரால் விதிக்கப்பட்டது.  மேலும் இம்மருத்துவமனைக்காக வழங்கப்பட்டிருந்த  குடிநீர் இணைப்புகளும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.  உரிய விதிகளின் படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.அ.அசோகன், மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.எம். செந்தில், சுகாதார அலுவலர் திரு.கே. ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.எஸ். சுரேஷ் , திரு. கே. சங்கர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.