செய்தி வெளியீடு எண் :124,நாள் : 22.10.2017 சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் உறுப்பினர் / செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருமதி . ரீட்டா ஹரீஷ் தாக்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு

செய்தி வெளியீடு எண் :124,நாள் : 22.10.2017 சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் உறுப்பினர் / செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருமதி . ரீட்டா ஹரீஷ் தாக்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு

சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமினை 22.10.2017 அன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் உறுப்பினர் / செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருமதி . ரீட்டா ஹரீஷ் தாக்கர் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி  மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 89 சேலம் (வடக்கு ) சட்டமன்ற தொகுதி , 90 சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளில் உள்ள 579   வாக்குச்சாவடி மையங்களிலும் சுருக்க முறை திருத்தம்  சிறப்பு முகாம் 22.10.2017 அன்று நடைபெற்று வருகிறது. 
அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 4 ல் உள்ள சாரதா வித்யா பால மந்தில் மகளிர் மேல் நிலைப் பள்ளியில்   நடைபெற்று வரும்   சுருக்க முறை திருத்த பணிகளை 22.10.2017 அன்று ஆய்வு செய்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் உறுப்பினர் / செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருமதி . ரீட்டா ஹரீஷ் தாக்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாறுதல் செய்ய படிவம் 8ஹ  ஆகியவை முறையாக விநியோகம் செய்யபடுகிறதா,  வழங்கப்படும் விண்ணப்பங்கள் பதிவேட்டியில் பதியப்படுகிறதா,   என்பதையும் ஆய்வு செய்தார். 
இம்முகாமில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் , உதவி ஆணையாளர் திரு.ப. ரமேஷ் பாபு  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.