செய்தி வெளியீடு எண் :121, நாள் : 21.10.2017 திருமணி முத்தாற்றில் குப்பைகள், இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகளை கொட்டுவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண் :121, நாள் : 21.10.2017 திருமணி முத்தாற்றில் குப்பைகள், இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகளை கொட்டுவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 29 ல் உள்ள ஸ்வர்ணாம்பிகை நகர் பகுதியில் உள்ள திருமணி முத்தாற்றில்,  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 21.10.2017 அன்று ஆய்வு செய்தார்.
திருமணி முத்தாறு சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 8 ல்  அணைமேடு பகுதியில் ஆரம்பித்து, கோட்டம் எண்  11, 28, 29, 30, 31, 32, 45, 46, 48, 49, 50 வழியாக கே.பி. கரடு பகுதியை சென்றடைந்து, ஆட்டையாம்பட்டி வழியாக திருச்செங்கோட்டில் காவிரி ஆற்றில் கலக்கிறது.  இந்நிலையில் பொது சுகாதார மேம்பாட்டிற்காக திருமணி முத்தாறு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  திருமணி முத்தாறு பகுதிகளில் உள்ள கோட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மாநகராட்சி சார்பில், தங்களது பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.  மேலும் தங்களது இல்லம் தேடி திடக்கழிவுகளை சேரிக்க வரும், துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.  மாறாக குப்பைகளை திருமணி முத்தாறு பகுதிகளில் கொட்டக்கூடாது. 
 
மேலும் கோட்டம் எண் 28 மற்றும் 32 ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், 
காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை திருமணி முத்தாறு ஆற்று பகுதிகளில் கொட்டக் கூடாது.  திருமணி முத்தாற்றில் குப்பைகள்,  இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை கொட்டுவதை  தடுக்கும்  பொருட்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இப்பணியாளர்கள் குப்பைகளை திருமணி முத்தாற்றில் கொட்டுவோர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பொதுசுகாதாரம் சட்டம் 1939 ன் படி 3 (25) 41 (1), (2) (4) ஆகிய  பிரிவுகளின் கீழ்  சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
 
எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை திருமணி முத்தாறு பகுதிகளில் கொட்டாமல், மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் அல்லது தங்களது இல்லம் தேடி திடக்கழிவுகளை சேரிக்க வரும், துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், மாநகராட்சி மேற்கொள்ளும் தூய்மை பணிகளுக்கு, பொதுமக்கள் ஓத்துழைப்பு வழங்கிட வேண்டும் என  ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.   
 
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.அ.அசோகன் உடன் இருந்தார்.