செய்தி வெளியீடு எண் :122,நாள் : 21.10.2017 சேலம் மாநகாரட்சிக்குட்பட்ட 88 சேலம் (மேற்கு) 89 சேலம் (வடக்கு) மற்றும் 90 சேலம் (தெற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கு ஏதுவாக இறப்புச்சான்றிதழ்கள் வழங்குவதற்கு சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :122,நாள் : 21.10.2017 சேலம் மாநகாரட்சிக்குட்பட்ட 88 சேலம் (மேற்கு) 89 சேலம் (வடக்கு) மற்றும் 90 சேலம் (தெற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கு ஏதுவாக இறப்புச்சான்றிதழ்கள் வழங்குவதற்கு சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகாரட்சிக்குட்பட்ட 88 சேலம் (மேற்கு) 89 சேலம் (வடக்கு)  மற்றும் 90 சேலம் (தெற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள  இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஏதுவாக,  படிவம் 7 மூலம் 22.10.2017 அன்று  வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் பொழுது இறப்புச் சான்றிதழை இணைத்து வழங்கிட வேண்டும்.  இந்நிலையில் இறப்புச் சான்றிதழ்கள்  இல்லாதவர்களுக்கு உதவிடும் பொருட்டு, சேலம் மாநகராட்சி மைய  அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில்  இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு  சிறப்பு உதவி மையங்கள்   அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள்  22.10.2017 முதல் 31.10.2017  வரை அலுவலக நேரங்களில்  செயல்படும் . 

சேலம் மாநகராட்சி பகுதிகளில்  வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று,  இறந்தவர்களின்  இறப்பு தொடர்பான விவரங்களை  பதிவு செய்து, இறப்புச்சான்றிதழ் பெற்றவர்களும் , பதிவு செய்தும் இறப்புச் சான்றிதழ் பெறாதவர்களும் இம்மையத்தினை அணுகி,  இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வதற்கு ஏதுவாக, இறந்த நபர்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல் (ஏடிவநச ஐனு ஓநசடிஒ ஊடியீல) அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்  (ஏடிவநச ஐனு சூரஅநெச)  ஆகிவற்றுடன்  படிவம் 7 மூலம் விண்ணப்பித்து,  இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இறந்தவர்களின் விவரங்களை நாளது வரை பதிவு செய்யாதவர்கள்,  உரிய ஆவணங்களுடன் அந்தந்த மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி அலுவலர்களின்  தள ஆய்வுக்கு பின்னர், உரிய விதிமுறைகளை பின்பற்றி, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே  பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  செம்மையான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.