செய்தி வெளியீடு எண் :119, நாள் : 20.10.2017 சேலம் மாநகாரட்சிக்குட்பட்ட 89 சேலம் (வடக்கு) மற்றும் 90 சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :119, நாள் : 20.10.2017 சேலம் மாநகாரட்சிக்குட்பட்ட 89 சேலம் (வடக்கு) மற்றும் 90 சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 89 சேலம் (வடக்கு ) சட்டமன்ற தொகுதி , 90 சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து  வாக்குச்சாவடி மையங்களிலும் சுருக்க முறை திருத்தம்  சிறப்பு முகாம்  22.10.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் . 
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி  மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 22.10.2017  ஞாயிற்றுக் கிழமை அன்று  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  சுருக்க முறை திருத்தம்  சிறப்பு முகாம்    நடைபெறும். 
இம்முகாம்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இம்முகாம்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்திடவும் / தொகுதி மாறி இடம்பெயர்ந்த வாக்காளர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் - 6 பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும். இரு முறை வாக்காளர்களாக பதிவாகியுள்ளவர்கள் பெயர் நீக்கம் செய்திடவும் / தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடம் மாறுதல் செய்தவர்களும், தங்களது பெயர்களை நீக்கம் செய்திட படிவம் - 7 பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பெயர் திருத்தம் / முகவரி திருத்தம்/ பாலின திருத்தம் / வயது திருத்தம் /  வாக்காளர் பட்டியல் புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் - 8 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் விட்டு பாகம் இடம் மாறிய வாக்காளர்கள் படிவம் - 8 ஹ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 31.12.1999 மற்றும் அதற்கு முன்பு பிறந்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இம்முகாமில் உரிய விண்ணப்பங்களை பெற்று பிறப்புச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து,  தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும்   பொது மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / திருத்தம் / நீக்கம் மேற்கொள்ள ஆன் லைன் (டீn டுiநே) -  ல்   றறற.nஎளயீ.in  மூலமாகவும்   விண்ணப்பிக்கலாம் என  ஆணையாளர் தெரிவித்துள்ளார்.