செய்தி வெளியீடு எண் :118,நாள் : 20.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனை இடங்ளில் உள்ள குப்பைகள் மற்றும் மழைநீரினைஅகற்றாத உரிமையாளர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :118,நாள் : 20.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனை இடங்ளில் உள்ள குப்பைகள் மற்றும் மழைநீரினைஅகற்றாத உரிமையாளர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 கோட்டங்களிலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர துப்புரவு பணிகள் மற்றும் இரவு நேரங்களில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனை இடங்களில் குப்பைகள் , முற்புதர்கள், திடக்கழிவுகள், தேங்கியுள்ள மழை நீர் உள்ளிட்டவைகள் அகற்றப்படாமல் பொது சுகாதார மேம்பாட்டிற்கு தடையாக உள்ளது.  இதனை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனை உரிமையாளர்கள் உடனடியாக, தங்களது காலி மனைகளில் உள்ள குப்கைள், முற்புதர்கள், திடக்கழிவுகள் , தேங்காய் சிரட்டைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீர் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 
 
மாநகராட்சி அலுவலர்கள் / பணியாளர்கள் தள ஆய்வு மேற்கொள்ள வரும் பொழுது, காலிமனைகளில்  பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீர் போன்றவைகள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், மாநகராட்சி நிர்வாகமே மேற்கூரியவற்றை அப்புறப்படுத்தி, அதற்கான செலவினத் தொகையினையும் அபராதத்துடன் வசூலிக்கப்படும்.  எனவே பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, பொது சுகாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.