செய்தி வெளியீடு எண் :120, நாள் : 20.10.2017 கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட தனி நபர் வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 86 ஆயிரம் அபராதத் தொகை 20.10.2017 அன்று ஒரு நாள் மட்டும் வசூலிக்கப்பட்டது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :120, நாள் : 20.10.2017 கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்ட தனி நபர் வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 86 ஆயிரம் அபராதத் தொகை 20.10.2017 அன்று ஒரு நாள் மட்டும் வசூலிக்கப்பட்டது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் டெங்கு தடுப்பு  பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும், தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் / பணியாளர்களை வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் அனுமதித்திட வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவுருத்தியிருந்தது. இந்நிலையில் 20.10.2017 அன்று சேலம் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட அனைத்து கோட்டங்களிலும் , டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்கள் / பணியாளர்கள் தள ஆய்வு மேற்கொண்டனர்.  அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண் 24, 28 பகுதிகளில் அமைந்துள்ள  4 தனியார் ஜவ்வரிசி ஆலைகளில்  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, தலா  ரூ. 10 ஆயிரம் வீதம்   ரூ. 40 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.  
அஸ்தம்பட்டி மண்டலத்தில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள மரவனேரி முதல் தெருவுக்கு  சென்ற அலுவலர்களை வீட்டிற்குள் ஆய்வு செய்யவிடாமல்  தடுத்து நிறுத்தியதால் சம்மந்தப்பட்ட  தனி நபருக்கு ரூ. 5 ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டு, வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.   மேலும் நடேசன் காலனி பகுதியில் உள்ள 3 வீடுகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவ்வீடுகளில்  உள்ள  குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.  செரி ரோடு பகுதியில் உள்ள தேநீர் விடுதியில் குடிநீரில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 1 ஆயிரம் மட்டும் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
 
அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 44 களரம்பட்டி மெயின் ரோடு பகுதிகளில் உள்ள 4 தனியார் நிறுவனங்களில்    கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ . 5  ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 50 ல் கந்தப்பா காலனி பகுதிகளில் 2 ஜவ்வரிசி ஆலைகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ,  ரூ. 20 ஆயிரம் அபராதத்  தொகை என மொத்தம் 20.10.2017 அன்று ரூ.86 ஆயிரம் அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் நிறுவனங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை  உறுதி செய்து கொள்ளவும், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படியும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தினசரி டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் / பணியாளர்கள் ஆய்வின் போது,  கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தனி நபர் வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது அபராதத் தொகை வசூலிப்பதோடு, குடிநீர் இணைப்புகள் இருப்பின் அவைகள் துண்டிக்கப்படும்  என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.