செய்தி வெளியீடு எண். 115, நாள்:19.10.2017 சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண். 29ல் குடிநீரினை பாதுகாப்பற்ற முறையில் தேக்கி வைத்து கொசுப் புழுக்கள் உருவாகும் நிலையினை ஏற்படுத்திய 5 (ஐந்து) வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே, இ.ஆ.ப., நடவடிக்கை

செய்தி வெளியீடு எண். 115, நாள்:19.10.2017 சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண். 29ல் குடிநீரினை பாதுகாப்பற்ற முறையில் தேக்கி வைத்து கொசுப் புழுக்கள் உருவாகும் நிலையினை ஏற்படுத்திய 5 (ஐந்து) வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே, இ.ஆ.ப., நடவடிக்கை

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண். 29ல் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரோஉறினி ரா. பாஜிபாகரே, இ.ஆ.ப., அவர்கள் 19.10.2017 அன்று ஆய்வு செய்தார்.  இவ்வாய்வின் போது குடிநீரினை பாதுகாப்பற்ற முறையில் தேக்கி வைத்து கொசுப் புழுக்கள் உருவாகும் நிலையினை ஏற்படுத்திய 5 (ஐந்து) வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்திரவிட்டார்.  

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்கள் தேவைக்கு மீறி குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம் என்றும் கொசுப் புழுக்கள் உருவாகும் நிலையினை உருவாக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் வைத்திருந்தார்.  மேலும் நோய் தடுப்பு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.  இந்நிலையில் 17.10.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வின்போது கோட்டம் எண். 29ல் அர்த்தனாரி தெரு மற்றும் சாம்பலிங்க மூர்த்தி தெரு ஆகிய இடங்களில் 5 வீடுகளில் குடிநீரை தேவைக்கு மீறி பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்து கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகும் நிலை உருவாக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து அவ்வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பினை உடனடியாக துண்டித்திட சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலருக்கு உத்திரவிட்டார்.  

மேலும், சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குடிநீரினை தேவைக்கு மீறி 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் இருக்கும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், உணவங்கள் மற்றும் தேநீர் விடுதிகள் ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சுகாதார மேம்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்போர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  வீடுகளில் கொசுப் புழுக்கள் உள்ளதா என்பதை கண்டறிய சேலம் மாநகராட்சி சார்பில் வருகை தரும் சுகாதார பணியாளர்கள், கொசுப் புழுக்களை கண்டறிந்து அகற்றுபவர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்ட களப் பணியாளர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வீடுகளில் சோதனை செய்வதற்கு அனுமதித்திட வேண்டும்.  மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். 
இவ்வாய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)                        மரு கே.பூங்கொடி, உதவி ஆணையாளர் திரு. நா. சத்தியநாராயணன், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.