செய்தி வெளியீடு எண். 116, நாள்:19.10.2017, டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் மரு .ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ,ப.,தகவல் .

செய்தி வெளியீடு எண். 116, நாள்:19.10.2017, டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் மரு .ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ,ப.,தகவல் .

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும்  டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளை அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் -29 ல்  ஸ்வர்ணாம்பிகா நகர் பகுதிகளில்    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
 முதன்மை செயலாளர் மரு .ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ,ப., அவர்கள் 19.10.2017 அன்று ஆய்வு செய்தார் .
        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஊரக பகுதிகள் மற்றும் சேலம் மாநகராட்சி  பகுதிகளில் பல்வேறு நிலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இப்பணிகளில் பொதுமக்களையும் முழுமையாக ஈடுபடுத்தி  மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது .
       டெங்கு தடுப்பு பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை  , நகராட்சி நிர்வாகம் ,கல்வி துறை பொதுசுகாதாரத்துறை ,வருவாய்த்துறை ,பேருராட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது .அரசு சார்பிலும் உள்ளாட்சி அமைப்பு சார்பிலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ,பொதுமக்களிடையே டெங்கு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .இருந்தபோதிலும் பொதுமக்கள் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டவுடன் அரசு மருத்துவமனையோ அல்லது ஆரம்பசுகாதார நிலையங்களை அனுகாமலும் ,சுயமருத்துவம் செய்து கொள்வதாலும் பல்வேறு இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டுவிடுகிறது .இந்நிலையினை தவிர்த்திட பொதுமக்கள் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டவுடன் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று நலன் பெற வேண்டும் .
         பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறக்களை சுத்தமாக பராமரித்து , குடிநீரினை தேவைக்கேற்ப்ப பாதுகாப்பாக சேமித்து , பொது சுகாதாரா மேம்பாட்டிற்கு உதவினால் மட்டுமே அரசு மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகள் பயன்தரும் .எனவே பொதுமக்கள் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும் . மேலும் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதத்திற்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது  என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் மரு .ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ,ப., தெரிவித்தார் .
                               இவ்வாய்வின்போது  மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே, இ.ஆ.ப.,  ,மாநகாட்சி  ஆணையாளர் திரு .ரெ,சதீஷ் , செயற்பொறியாளர் திரு.அ. அசோகன் , உதவி ஆணையாளர் நா. சத்தியநாராயணனன் , துணைஇயக்குநர்கள் (மருத்துவபணிகள் ) மரு . கே .பூங்கொடி .மரு . வி,விஜயலட்சுமி ,மாநகர் நல அலுவலர்  திரு. கே .பிரபாகரன் . உதவி மாநகர் நல அலுவலர் மரு.வசந்த் திவாகர்  .உள்பட பலர் கலந்துகொண்டனர் .