செய்தி வெளியீடு எண் :111, நாள் : 14.10.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மேம்பாட்டு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

செய்தி வெளியீடு எண் :111, நாள் : 14.10.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மேம்பாட்டு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 6 மற்றும் 29 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் , சுகாதார மேம்பாட்டு பணிகள் குறித்து மரு. கௌவ்சல்குமார் தலைமையிலான மத்திய குழுவினர் 14.10.2017 அன்று ஆய்வு மேற்கொண்டனர்.  
அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து,  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்களிடம் ஆலோசனை நடத்தினர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் விவரங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர்.  நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் குறித்தும், குடிநீர் வழங்கல் தொடர்பாகவும்  கேட்டறிந்தனர்.  கோட்டம் எண் 6 ல் மரு. கௌவ்சல்குமார் தலைமையிலான மத்திய குழுவினர் என்.ஜி.ஜி.ஒ. காலனி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்தனர். குடிநீர் தேக்கி வைக்கும் பாத்திரங்கள் முறையான முறையில் பராமரிக்கப்படுகிறதா, மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும்  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். பெரியார் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் , பங்குபெற்ற பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு விவரங்களை தெரிவித்து, வீடுகளை சுகாதாரமாக பராமரித்திடுமாறு கேட்டுக் கொண்டனர். 
கோட்டம் எண் 29 ல் தேவாங்கபுரத்தில் மரு.வினய்குமார் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்த குழுவினர், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொண்டனர்.  
இவ்வாய்வின் போது மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயலாளர் மரு. செந்தில்ராஜ்,  இ.ஆ.ப., மத்திய குழுவைச் சேர்ந்த மரு. சுவாதி, தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகளின் இயக்குநர் மரு. இன்பசேகரன், பொது சுகாதார கூடுதல் இயக்குநர் மரு. வடிவேல், இணை இயக்குநர் மருத்துவ சேவை மரு. உமா, துணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு. பூங்கொடி, உதவி ஆணையாளர் திரு.நா. சத்திய நாராயணன், தாய் சேய் நல அலுவலர் திருமதி. என். சுமதி, உதவி செயற்பொறியாளர் திருமதி. பி. கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.