செய்தி வெளியீடு எண் :114, நாள் : 16.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு. முகமது நசீமுத்தீன் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் :114, நாள் : 16.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு. முகமது நசீமுத்தீன் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்

 
 
சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு  பணிகளை, சூரமங்கலம் மண்டலம்  கோட்டம் எண்  23 ல் உள்ள அம்மாசி நகர் பகுதிகளிலும் , அம்மாபேட்டை  மண்டலம் கோட்டம் எண் 39 பூவாத்தார் தெரு மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம்  கோட்டம் எண் 46 ல் மாரியம்மன் கோவில் ஆகிய   பகுதிகளில்  மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல்      மற்றும்     வனத்துறை        அரசு     முதன்மை         செயலாளர்  
திரு. முகமது நசீமுத்தீன் இ.ஆ.ப., அவர்கள் 16.10.2017 அன்று  ஆய்வு செய்தார். 
 
இவ்வாய்வின் போது அரசு முதன்மை செயலாளர் அவர்கள் பொதுமக்களிடம் குடிநீர் வழங்கல் குறித்தும், மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். வீடுகளுக்குள் சென்று ஆய்வு செய்த முதன்மை செயலாளர் அவர்கள் பொதுமக்கள் தண்ணீர் தேக்கி வைத்துள்ள பாத்திரங்களையும், குளிர் சாதனப்பெட்டி ஆகியவற்றை தூய்மையாக பராமரித்து வருகிறார்களா என்பதை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது, அதற்கு என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், உடல் நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று  சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், சுயமருத்துவம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார்.  
 
மேலும் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தினரால் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அப்பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், வீடுகளிலுள்ள குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மாநகராட்சி பகுதிகளில் உரிய கால அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், தேவைக்கேற்ப குடிநீரை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பருவநிலை மாற்றத்தினால் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேவையற்ற பொருட்களை குடியிருப்பு பகுதிகளிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தினார். 
 
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப.,  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் மரு. டி. சுகுமார், செயற்பொறியாளர்கள் திரு.ஆர்.ரவி, திரு.ஜி. காமராஜ்,  துணை இயக்குநர் சுகாதார பணிகள் திருமதி. கே. பூங்கொடி, உதவி மாநகர நல அலுவலர் (பொ) மரு. வசந்த திவாகர், உதவி ஆணையாளர்கள்  திரு.ப. ரமேஷ் பாபு, திரு.மு. கணேசன், திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்    உள்பட பலர் கலந்து கொண்டனர்.