செய்தி வெளியீடு எண் :112, நாள் : 15.10.2017 சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செய்தி வெளியீடு எண் :112, நாள் : 15.10.2017 சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி  பணிகள் குறித்த ஆய்வு கூட்டம். சேலம் மாநகராட்சி  மைய அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர்           திரு. ஜி. பிரகாஷ்       இ.ஆ.ப., அவர்கள்    தலைமையில் 
 மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ்  முன்னிலையில்  15.10.2017 அன்று நடைபெற்றது.  
 
சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வரி வருவாய், குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை , பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் செயலாக்கம், பணியாளர்களின் நிர்வாக நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.    மாநகராட்சி மற்றும் மண்டல நகராட்சி பகுதிகளில் விடுபட்டுள்ள அல்லது குறைவாக விதிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி , காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் மதிப்பீடு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உரிய கால அளவிற்குள் முடிக்க வேண்டும்.
பருவ நிலை மாற்றத்தினை தொடர்ந்து  சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொற்று நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்  தேவையான அளவு மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் , மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள் , அம்மா உணவகங்கள், வழிபாட்டுத் தளங்கள், சத்துணவு மையங்கள்,    சேலம் ரயில்வே சந்திப்புகளில்  வழங்கிட வேண்டும். 
மேலும் மாநகராட்சி பகுதிகளில் தினசரி பொது மக்களுக்கு வழங்கப்படும்  குடிநீரில் திரவ வடிவிலான குளோரின் வழங்குவதற்கான நடவடிக்கையினை ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் எடுத்து, அதனடிப்படையில் தற்போது 60 கோட்டங்களுக்கும் சீரான அளவில்  திரவ வடிவிலான குளோரின் குடிநீரில் கலந்து  வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார  பிரிவினர்  அனைத்து பகுதிகளிலும் தினசரி மருந்து தெளிப்பு பணிகளையும் , தீவிர துப்புரவு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  சாக்கடை கால்வாய்களை தூர்வாறுதல் , நீர் வழிப்பாதைகளில் உள்ள தடுப்புகள் மற்றும்  முற்செடிகளை அகற்றி சுத்தம் செய்யவும்,  குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகாதவாறு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து   சுகாதார பிரிவினை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் ,  சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள்  , செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்ளிட்டோர் எந்த நேரமும் சுகாதார மேம்பாட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணையாளர் அறிவுறுத்தினார்.  
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநர் திருமதி. ஆர். லஷ்மி, செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஆர்.ரவி, திரு.ஜி. காமராஜ்,  துணை இயக்குநர் சுகாதார பணிகள் திருமதி. வி. விஜயலட்சுமி, நகராட்சி  மண்டல பொறியாளர் திரு.எஸ். திருமாவளவன், உதவி மாநகர நல அலுவலர் (பொ) மரு. வசந்த திவாகர், உதவி ஆணையாளர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்    உள்பட பலர் கலந்து கொண்டனர்.