செய்தி வெளியீடு எண் :113, நாள் : 15.10.2017 நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை 15.10.2017 அன்று ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு எண் :113, நாள் : 15.10.2017 நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை 15.10.2017 அன்று ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சியில்  அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட  கோட்டம் எண் 29 ல் வாசக சாலை தெரு பகுதிகளில்   மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை  நகராட்சி நிர்வாக ஆணையாளர் திரு. ஜி. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் 15.10.2017 அன்று ஆய்வு செய்தார். 
வீடுகள் தோறும் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக ஆணையாளர்,  பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான அளவில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சாக்கடை தூர்வாரும் பணிகள், தீவிர துப்புரவு பணிகளையும் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக ஆணையாளர் பொதுமக்களுக்கு தினசரி நிலவேம்பு குடிநீர் உரிய கால இடைவெளியில் வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
 
 
சேலம்  மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்கள், கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுபவர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டவர்களின்  களப்பணிகளையும் ஆய்வு செய்தார்.  மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்திடவும், குடிநீர் சேகரித்து வைக்கும்   பாத்திரங்களை சுத்தப்படுத்தி பயன்படுத்திடவும், கொசுக்கள் நுழையாத வண்ணம்  பாத்திரங்களை மூடி வைத்திடுமாறும் அறிவுறுத்தினார். 
 
பின்னர் மாமாங்கம் பகுதியில் ரூ. 15.50  இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள குடிநீரில்  திரவ வடிவிலான  குளோரின் செலுத்தும் திட்ட மையத்தினை  ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து  மாநகராட்சி புதிய மைய அலுவலகத்தையும் பார்வையிட்டார். 
 
இவ்வாய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் ,  நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநர் திருமதி. ஆர். லஷ்மி, செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஆர்.ரவி, திரு.ஜி. காமராஜ்,  துணை இயக்குநர் சுகாதார பணிகள் திருமதி. வி. விஜயலட்சுமி, நகராட்சி  மண்டல பொறியாளர் திரு.எஸ். திருமாவளவன், உதவி மாநகர நல அலுவலர் (பொ) மரு. வசந்த திவாகர், உதவி ஆணையாளர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்    உள்பட பலர் கலந்து கொண்டனர்.