செய்தி வெளியீடு எண் :109, நாள் : 12.10.2017 ஏற்காடு அடிவாரத்திலிருந்து பள்ளப்பட்டி ஏரியை சென்றடையும் வரட்டாறு ஓடையில் தடுப்புகளை அகற்றும் பணிகளை ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

செய்தி வெளியீடு எண் :109, நாள் : 12.10.2017 ஏற்காடு அடிவாரத்திலிருந்து பள்ளப்பட்டி ஏரியை சென்றடையும் வரட்டாறு ஓடையில் தடுப்புகளை அகற்றும் பணிகளை ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

ஏற்காடு அடிவாரத்திலிருந்து குருவம்பட்டி , செட்டிச்சாவடி , ஏ.டி.சி. நகர், டி.வி.எஸ். மற்றும் அங்கம்மாள் காலனி வழியாக பள்ளப்பட்டி ஏரியை சென்றடையும் வரட்டாறு ஓடையில் தடுப்புகளை அகற்றும் பணிகளை  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 12.10.2017 அன்று ஆய்வு செய்தார். 
ஏற்காடு வனப்பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தால், மழை நீர்  ஏற்காடு அடிவாரத்திலிருந்து வரட்டாறு ஓடை  மூலம் குருவம்பட்டி உயிரியல் பூங்கா , செட்டிச்சாவடி வழியாக பள்ளப்பட்டி ஏரியை சென்றடைகிறது.  இவ்வோடையில் மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் வழிப்பாதைகளில் தடுப்புகளை அகற்றி, மழைநீர் தேங்காத வண்ணம் ஏரியை சென்றடைய ஏதுவாக, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு நீர் வழித்தடங்களில் உள்ள தடுப்புகளை அகற்றுவதற்கும் மாநகராட்சி ஆணையாளர் உத்திரவிட்டதன் அடிப்படையில் அப்பணிகள் நடைபெற்று வருகிறது.  அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்  16 ல் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு அருகில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர், பின்னர் கோட்டம் எண் 5 ல் உள்ள  சின்னபுதூர் , மற்றும் கோட்டம் 16 ல் உள்ள டி.வி.எஸ்.  பகுதிகளில் உள்ள வரட்டாறு ஒடையில் தடுப்புகளை  அகற்றும் பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.  
ஒடைகளிலிருந்து அகற்றப்பட்ட முற்புதர்கள், செடி, கொடிகள் மற்றும் தூர்வாரப்பட்ட கழிவுகள் ஆகியவற்றை உடனே வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி, அப்பகுதியினை தூய்மையாக பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மார்க்க பந்து சாலையில் உள்ள வரட்டாறு ஒடை கரையில் கட்டிடக்கழிவுகளையோ, தேவையற்ற பொருட்களையோ பொதுமக்கள் கொட்டிவிடாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திய ஆணையாளர்,  வரட்டாறு ஓடை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, ஏரியை சென்றடையும் வரையிலான நீர் வழிப்பாதைகளை தினந்தோறும் ஆய்வு செய்திடவும் ,  தங்கு தடையின்றி மழைநீர் இவ்வோடையில் செல்வதற்கு தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள அறிவுறுத்தினார். 
இவ்வாய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள் திரு.எம். செந்தில் , திரு.பி. கலைவாணி உள்பட பலர் உடனிருந்தனர்.