செய்தி வெளியீடு எண் :105,நாள் : 10.10.2017 சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் 1022 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் :105,நாள் : 10.10.2017 சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் 1022 பணியாளர்களைக் கொண்டு தீவிர துப்புரவு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 1022 பணியாளர்களைக் கொண்டு,  மேற்கொள்ளப்படும் தீவிர  துப்புரவு பணிகளை அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில்,   தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  திரு. ரெ.சதீஷ் அவர்கள் 10.10.2017 அன்று துவக்கி வைத்தார்.   
பருவ நிலை மாற்றத்தினை தொடர்ந்து சேலம் மாநகர பகுதிகளில், தீவிர துப்புரவு பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக, அட்டவணை தயாரிக்கப்பட்டு நாள் 1 க்கு 1000 பணியாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் தீவிர துப்புரவு பணிகள் 10.10.2017 முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.  அதனடிப்படையில் 510 துப்புரவு பணியாளர்கள், 412 கொசுப்புழு கண்டறிந்து அகற்றுபவர்கள், 60 மலேரியா தடுப்பு களப்பணியாளர்கள், 40 துப்புரவு மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 1022 பேர் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் 160 தள்ளுவண்டிகள், 8 லாரிகள், 3 டோசர்கள், 1 ரோபோ வண்டிகள்,  2 ஜெ.சி.பி க்கள் மூலம் தீவிர துப்புரவு பணிகளும், 50 கைத் தெளிப்பான்கள் மற்றும் 4 வாகனத் தெளிப்பான்கள்  மூலம் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. களப்பணியாளர்கள் அனைவரும் பொதுமக்கள் நம்பிக்கை பெறும் வகையில், பணியாற்றிட வேண்டும் எனவும், பணி மேற்கொள்ளுவதில் எந்தவித தொய்வின்றி மேற்கொள்ள,  அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவதற்கு ஏதுவான, அறிவுரைகளை களப்பணியாளர்கள் தெரிவித்திட வேண்டும்.  தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தினசரி ஆய்வு செய்து , பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா , என்பதற்கான அறிக்கையினை தினசரி அளித்திட வேண்டும். 
அனைத்து மண்டலங்களிலும் தீவிர துப்புரவு பணிகள்மேற்கொள்ளுவதோடு ,  நிலவேம்பு குடிநீர்  தினந்தோறும் அனைத்து பகுதிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ள வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 
இந்நிகழ்ச்சியில்  உதவி ஆணையாளர் ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன் உதவிசெயற்பொறியாளர் திரு.எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி, சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள்  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.