செய்தி வெளியீடு எண் :103 , நாள் : 08.10.2017 சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் ஆய்வு

செய்தி வெளியீடு எண் :103 , நாள் : 08.10.2017 சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி  மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில்  சிறப்பு முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 89 சேலம் (வடக்கு ) சட்டமன்ற தொகுதி , 90 சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளில் உள்ள 579   வாக்குச்சாவடி மையங்களிலும் சுருக்க முறை திருத்தம்  சிறப்பு முகாம் 08.10.2017 அன்று நடைபெற்று வருகிறது. 
அதனடிப்படையில்  கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட  கோட்டம் எண் 56 ல் உள்ள  வீரலட்சுமி  மகளிர் மேல் நிலைப் பள்ளி மற்றும் அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 11 ல் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற்று வரும்   சுருக்க முறை திருத்த பணிகளை 08.10.2017 அன்று ஆணையாளர்  ஆய்வு செய்தார்.    
ஆய்வின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாறுதல் செய்ய படிவம் 8ஹ  ஆகியவை முறையாக விநியோகம் செய்யபடுகிறதா,  வழங்கப்படும் விண்ணப்பங்கள் பதிவேட்டியில் பதியப்படுகிறதா,   வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் உள்ளார்களா என்பதையும் , வாக்காளர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் பாகம் எண், தெரு எண், ஆகிய விபரங்கள் முறையாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு போதுமான இட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். 
இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர்கள் திரு.மு. கணேசன், ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ்,  மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன்,  உதவி வருவாய் அலுவலர்கள் திரு.ஏ.எம். குமார், திரு.பி.  மருதபாபு  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.