செய்தி வெளியீடு எண் :101 ,நாள் : 05.10.2017 டெங்கு தடுப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் தீவிர துப்புரவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் கோரிமேடு அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் துவக்கி வைத்தார்.

செய்தி வெளியீடு எண் :101 ,நாள் : 05.10.2017 டெங்கு தடுப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் தீவிர துப்புரவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் கோரிமேடு அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் துவக்கி வைத்தார்.

டெங்கு தடுப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் தீவிர துப்புரவு பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி  ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள்  05.10.2017 அன்று கோரிமேடு அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் துவக்கி வைத்தார். பின்னர் 3 ஆயிரம் மாணவியர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டனர். 

 தமிழ்நாடு அரசு தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகளை சேலம் மாவட்டத்தில் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.  சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களிலும் தினசரி கோட்ட வாரியாக டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுதல், பயன்படாத டயர்களை அப்புறப்படுத்துதல், சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்தல் , கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள் மூலம் உரிய இடைவெளியில் மருந்துகள் தெளித்தல் மற்றும் கல்லூரி மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற  அனைத்து பணிகளும் தொய்வின்றி மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசு பிரதி வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடித்து, தீவிர துப்புரவு பணி, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் டெங்கு தடுப்பு நாள்  மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  மாணவ,   மாணவியர்கள் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உடனடியாக அனைத்து பொதுமக்களையும் சென்றடையும் என்பதை அடிப்படையாக கொண்டு, சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார்   கல்லூரிகளில் பயிலும் 23 ஆயிரத்து 450  மாணவ, மாணவியர்கள் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 213 பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கடிதங்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

சமூக நோக்கத்தோடு  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை பெற்றோர்களிடமும் , அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் மாணவ, மாணவியர்கள் விளக்கி கூறினால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் , பயன்படாத டயர்கள் ஆகியவற்றை அகற்றுவதன் மூலமும், குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை சுத்தமாக பராமரிப்பதல் போன்ற பணிகள் எளியதாக தோன்றினாலும், டெங்கு கொசுப்புழுக்களை வளராமல் தடுப்பதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, மாணவ, மாணவியர்கள் உயிர்களைக் காப்பாற்றும் சமூக நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஆர். ரவி, மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு. நா. சத்தியநாராயணன், உதவி செயற்பொறியாளர் திரு.எம். செல்வராஜ், திரு. கூ. செந்தில்குமார், தாய் சேய் நல அலுவலர் திருமதி என். சுமதி, சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.