செய்தி வெளியீடு எண் :99, நாள் : 03.10.2017 , சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

செய்தி வெளியீடு எண் :99, நாள் : 03.10.2017 , சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான  வரைவு வாக்காளர்  பட்டியல் 03.10.2017 அன்று வெளியிடப்பட்டது. 03.10.2017 ன் படி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,30,880 ஆண் வாக்காளர்களும், 1,35,565  பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர் என மொத்தம் 2,66,451  வாக்காளர்களும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,26,361 ஆண் வாக்காளர்களும், 1,31,172 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,57, 546 வாக்காளர்கள்  உள்ளனர்.  
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி  மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (உதவி ஆணையாளர்கள் அலுவலகங்கள் சூரமங்கலம், அஸ்தம்பட்டி , அம்மாபேட்டை , கொண்டலாம்பட்டி மண்டலங்கள்)    மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவு ஆகியவற்றில் தினந்தோறும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் இணைத்து நேரில் அளிக்கலாம். 
மேலும் 08.10.2017 , 22.10.2017 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் வடக்கு மற்றம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள்  நடத்தப்படும். இம்முகாம்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இம்முகாம்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்திடவும் / தொகுதி மாறி இடம்பெயர்ந்த வாக்காளர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் - 6 பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும். இரு முறை வாக்காளர்களாக பதிவாகியுள்ளவர்கள் பெயர் நீக்கம் செய்திடவும் / தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடம் மாறுதல் செய்தவர்களும், தங்களது பெயர்களை நீக்கம் செய்திட படிவம் - 7 பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பெயர் திருத்தம் / முகவரி திருத்தம்/ பாலின திருத்தம் / வயது திருத்தம் /  வாக்காளர் பட்டியல் புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் - 8 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் விட்டு பாகம் இடம் மாறிய வாக்காளர்கள் படிவம் - 8 ஹ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 31.12.1999 மற்றும் அதற்கு முன்பு பிறந்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இம்முகாமில் உரிய விண்ணப்பங்களை பெற்று பிறப்புச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து,  தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும்   பொது மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / திருத்தம் / நீக்கம் மேற்கொள்ள ஆன் லைன் http://www.elections.tn.gov.in k‰W« www.nvsp.in  மூலமாகவும்   விண்ணப்பிக்கலாம்.