செய்தி வெளியீடு எண். 98, நாள்: 01.10. 2017, சேலம் மாநகராட்சி பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக ரூ. 23 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக 36 கைத் தெளிப்பான்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்.

செய்தி வெளியீடு எண். 98, நாள்: 01.10. 2017, சேலம் மாநகராட்சி பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக ரூ. 23 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக 36 கைத் தெளிப்பான்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்.

பருவ நிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு,   சேலம் மாநகராட்சி  பகுதிகளில் தீவிர துப்புரவு பணிகள் , நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகள் , வாகனத் தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள்  மூலம் மருந்துகள் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்   மருந்து தெளிப்பு  பணிகளை மேற்கொள்ளுவதற்காக ரூ. 23 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக 36 கைத் தெளிப்பான்கள் வாங்கப்பட்டள்ளது. அவைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் 01.10.2017 அன்று  மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் பயன்பாட்டிற்காக  சுகாதாரத் துறையினரிடம் வழங்கினார். 
மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது : -
மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 4  வாகனத் தெளிப்பான்கள் மற்றும்  24 கைத்தெளிப்பான்கள் மூலம்  மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது  புதிதாக வாங்கப்பட்டுள்ள 36 புதிய கைத் தெளிப்பான்களை சேர்த்து மொத்தம்  60 கைத் தெளிப்பான்கள் மற்றும் 4 வாகனத் தெளிப்பான்கள் மூலம்  60 கோட்டங்களில் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 
குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களிடம் மருந்து தெளிப்பதால் ஏற்படும் பயன்களை தெரிவித்து, வீடுகளுக்குள் கைத் தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திடும் வகையில், சுகாதார பணியாளர்கள் பணியாற்றிட வேண்டும்  என ஆணையாளர் அறிவுறுத்தினார். குடியிருப்பு பகுதிகள் , பள்ளி , கல்லூரி வளாகங்கள் , காலி மனைகளில் உள்ள செடிகள் உள்ள பகுதிகளில் தீவிரமாக மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். என சுகாதார பணியாளர்களிடம் தெரிவித்தார். 
  மேலும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் , உழவர் சந்தைகள், அம்மா உணவகங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் தினந்தோறும்  நில வேம்பு  குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தால்  எடுத்துள்ளது. 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு. அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு.மு. கணேசன்  சுகாதார அலுவலர்கள்  திரு.எம். சேகர், திரு. பி. மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.