ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருட்களை பொது இடங்களில் உடைப்பதை தவிர்த்திட வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் அறிவிப்பு

சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட  பொது இடங்களில்  ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருட்களை உடைத்து பொது சுகாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.  
மேலும் வீடுகளிலிருந்து பெறப்படும்  குப்பைகளை   மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில்  மட்டுமே போட வேண்டும்.  மாறாக தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வாகனங்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில், குப்பைகளை கொட்டுவோர் மீது   பொதுசுகாதார விதிகளின்படியும், திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழும்   அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.