செய்தி வெளியீடு எண் : 95 நாள் : 25.09 .2017

செய்தி வெளியீடு எண் : 95 நாள் : 25.09 .2017

சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு 30 இலட்சம் மதிப்பீட்டில் 
குடிநீரில்  திரவ வடிவிலான  குளோரின் செலுத்தும் திட்டத்தினை 
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப.,  அவர்கள் 
25.9.2017 அன்று  துவக்கி வைத்தார் .
சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு 30 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீரில்  திரவ வடிவிலான  குளோரின் செலுத்தும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப.,  அவர்கள் 25.9.2017 அன்று  மாமாங்கத்தில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். 
சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின்  மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீரும் மற்றும் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் 103 மில்லியன் லிட்டர் குடிநீரும் ஆக மொத்தம் 113 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி மேட்டூர் காவேரியில் இருந்து  பெறப்பட்டு,  10 இலட்சம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு, தற்போது மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளில்  உள்ள 57  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில்  நீரேற்றம் செய்து, திட வடிவிலான குளோரின் கலந்து  சீரான முறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் குடிநீர் விநியோகத்தில் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டும், பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒரே சீரான அளவில் 1 ழஞ மின் மோட்டார் மூலம் திரவ குளோரினை  (ளுடினரைஅ ழலயீடிஉhடடிசவைந)   பிரதான குடிநீர்  குழாயில் உட்புகுத்துதல் முறையில் குடிநீரில் கலப்பதற்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற உபகரணங்கள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. அதனடிப்படையில்  அரியாகவுண்டன்பட்டியில்  நங்கவள்ளி குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிராதான குடிநீர் குழாயில்  ரூ. 14.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,  தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் மாமாங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிராதான குடிநீர் குழாயில் ரூ. 15.50 இலட்சம் மதிப்பீட்டிலும், திரவ வடிவிலான குளோரினேசன் செய்ய ஏதுவாக  கட்டுப்பாட்டு அறைகள் , கருவிகள், மின் மோட்டார்கள் என மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
 மாமாங்கத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரம் லிட்டர் திரவ குளோரின் உட்புகுத்துதல் முறையில் 103 எம்.எல்.டி  குடிநீரில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரியாக்கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 சின்டெக்ஸ் தொட்டி மூலம்  திரவ குளோரின் உட்புகுத்துதல் முறையில் 10 எம்.எல்.டி குடிநீரில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
திரவ குளோரின் கலந்து குடிநீர் வழங்குவதால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  அனைத்து  பொதுமக்களுக்கும்  ஓரே சீரான அளவில்  திரவ வடிவிலான குளோரின் கலக்கப்பட்ட சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இதனால் குடிநீரினால் பரவக்கூடிய காய்ச்சல் போன்ற நோய்கள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஆர். ரவி, திரு.ஜி. காமராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.ஆர். அழகர்சாமி ,  உதவி செயற்பொறியாளர்கள் திருமதி. வி.திலகா, திரு.எம். செந்தில், திரு. பி. பழனிசாமி சுகாதார ஆய்வாளர் திரு.எ. கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
--------------------------------------------------------------------
வெளியீடு  / மக்கள் தொடர்பு அலுவலம், சேலம் மாநகராட்சி.