செய்தி வெளியீடு எண் :85 நாள் : 06.9.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் 48 மணி நேரத்திற்குள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :85 நாள் : 06.9.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் 48 மணி நேரத்திற்குள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

பருவ நிலை மாற்றத்தினை தொடர்ந்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து  பகுதிகளிலும் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்  06.9.2017 அன்று 4 மண்டலங்களில் உள்ள 16 இடங்களில் 11,254 வீடுகளில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனால் 48,853 பொதுமக்கள் பயன் பெறுவார்கள் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 12 ல் உள்ள பிள்ளையார் நகர் காலனியில் தீவிர துப்புரவு பணிகளை துவக்கி வைத்த ஆணையர் சேலம் மாநகராட்சி பகுதிகளில் 48 மணி நேரத்திற்குள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகை விதிக்கப்படும் என தெரிவித்தார். 
 
தீவிர துப்புரவு பணிகளில்  சூரமங்கலம் மண்டலத்தில் 200 துப்புரவு பணியாளர்கள், கொசுப்புழுக்களை கண்டறிந்து தடுத்திடும் பணியாளர்கள் 40 பேர் , மலேரியா  தடுப்பு பணியாளர்கள் 12 பேர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 200 பேர் என மொத்தம் 452 நபர்களும் , அஸ்தம்பட்டி மண்டலத்தில் 200 பேர் துப்புரவு பணியாளர்கள், குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுபவர்கள் 40 பேர்  , மலேரியா  தடுப்பு பணியாளர்கள் 12 பேர்  மற்றும்  கல்லூரி மாணவ, மாணவியரும் 100 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அம்மாபேட்டை மண்டலத்தில் 200 துப்புரவு பணியாளர்கள், குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றும்  பணியாளர்கள் 48 பேர் , மலேரியா  தடுப்பு பணியாளர்கள் 16 பேர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 250 பேர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 200 துப்புரவு பணியாளர்கள், குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து  பணியாளர்கள் 40 பேர் , மலேரியா  தடுப்பு பணியாளர்கள் 12 பேர்  மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 100 பேர் என மொத்தம் 4 மண்டலங்களில்  800 துப்புரவு பணியாளர்கள் , குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றும்  பணியாளர்கள் 168 பேர், மலேரியா தடுப்பு பணியாளர்கள் 52 பேர், கல்லூரி மாணவ, மாணவியர்கள் 650 பேர்  இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ளுவதற்காக 8 ஜே.சி.பி வாகனங்கள்,  31 டிராக்டர் மற்றும் டிப்பர்கள் , 4 டோசர்கள் மற்றும் 15 மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலத்திட்ட  மாணவ, மாணவியர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் சென்று வீடு , வீடாக சென்று டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளையும், தீவிர துப்புரவு பணிகளையும்  மேற்கொண்டு வருகின்றனர். 
முன்னதாக அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 9 ல் உள்ள சீலாவரி ஏரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.  அதனைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளையும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.  
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ் மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு. நா. சத்தியநாராயணன்,  சுகாதார ஆய்வாளர்கள் ஆர். சங்கர் , கே. சந்திரன், திரு.வீ. சரவணன், உதவி பொறியாளர் திருமதி. டி. அன்புச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். 
-------------------------------------------------------------
வெளியீடு  / மக்கள் தொடர்பு அலுவலம், சேலம் மாநகராட்சி.