செய்தி வெளியீடு எண் :84 நாள் : 05.9.2017 கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாத தனியார் வாகன நிறுவனத்திற்கு அபராதத்தொகை விதிப்பு மாநகராட்சி ஆணையாளர் தகவல்

செய்தி வெளியீடு எண் :84 நாள் : 05.9.2017 கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளாத தனியார் வாகன நிறுவனத்திற்கு அபராதத்தொகை விதிப்பு மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் பேருந்து , லாரி உரிமையாளர் சங்கங்களிடம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள  மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் உத்தரவின் பேரில் 05.9.2017 அன்று  அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 15 வது கோட்டம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார்  பேருந்து நிறுத்தம் / பனிமனையில்   மாநகர நல அலுவலர் திரு.வி. பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் இருந்தது கண்டறியப்பட்டது. கொசு ஒழிப்பு  பணிகளை முறையாக மேற்கொள்ளாத தனியார் நிறுவனத்திடமிருந்து  ரூ 2, 000 /-ம்  அபராதமாக வசூலிக்கப்பட்டது.  
மேலும் சேலம் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகன நிறுத்தம் / பனிமனைகளில் 2 நாட்களுக்குள் தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்கிட வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத நிறுவனத்தினர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
  இவ்வாய்வின் போது  முதுநிலை பூச்சியல் வல்லுனர் திரு. எம். நீலமேகம், சுகாதார ஆய்வாளர் திரு. ஆர். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.