செய்தி வெளியீடு எண் :81 நாள் : 01.9.2017 பள்ளி மாணவ, மாணவியர்கள் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகள் பல உயிர்களைக் காப்பாற்றும் உன்னதமான பணியாகும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு

செய்தி வெளியீடு எண் :81 நாள் : 01.9.2017 பள்ளி மாணவ, மாணவியர்கள் மேற்கொள்ளும் டெங்கு தடுப்பு பணிகள் பல உயிர்களைக் காப்பாற்றும் உன்னதமான பணியாகும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு

டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாணவ, மாணவியர்கள் சிறப்பாக செயல்படுத்தி  வருவதால், பல உயிர்களை காப்பற்றக்கூடிய உன்னதமான பணியினை மேற்கொண்டு வருவதற்கு, பள்ளி மாணவ, மாணவியர்களை 01.9.2017 அன்று கோட்டம் எண் 46 ல் உள்ள மாநகராட்சி குகை மூங்கப்பாடி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி  ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்ற டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில்   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்கள். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது : -
தமிழ்நாடு அரசு தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகளை சேலம் மாவட்டத்தில் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.  சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களிலும் தினசரி கோட்ட வாரியாக டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுதல், பயன்படாத டயர்களை அப்புறப்படுத்துதல், சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்தல் , கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள் மூலம் உரிய இடைவெளியில் மருந்துகள் தெளித்தல் மற்றும் கல்லூரி , பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற  அனைத்து பணிகளும் தொய்வின்றி மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில் மாநகராட்சி குகை மூங்கப்பாடி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.  மாணவ, மாணவியர்கள் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உடனடியாக அனைத்து பொதுமக்களையும் சென்றடையும் என்பதை அடிப்படையாக கொண்டு, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் பள்ளியில்  பயிலும் போது,  கல்வியின் அவசியத்தை கிராம மக்களிடம் எடுத்துரைத்து, குழந்தை திருமணங்களை தடுத்து, மாணவியர்களை தொடர்ந்து கல்வி பயில உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.  அதே போன்று சமூக நோக்கத்தோடு  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை பெற்றோர்களிடமும் , அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் மாணவ, மாணவியர்கள் விளக்கி கூறினால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் , பயன்படாத டயர்கள் ஆகியவற்றை அகற்றுவதன் மூலமும், குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம்களை சுத்தமாக பராமரிப்பதல் போன்ற பணிகள் எளியதாக தோன்றினாலும், டெங்கு கொசுப்புழுக்களை வளராமல் தடுப்பதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, மாணவ, மாணவியர்கள் உயிர்களைக் காப்பாற்றும் சமூக நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  
மேலும் பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுவதோடு வீட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அனைத்து பகுதிகளும் தூய்மையான பகுதியாக பராமரித்து, சுகாதாரமான சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ, மாணவியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.  மாணவியர்களுக்கு டெங்கு
 தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள், நிலவேம்பு குடிநீர் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், சுகாதார அலுவலர் திரு.மு. சேகர், சுகாதார ஆய்வாளர்கள் திரு.எஸ். சித்தேஸ்வரன், திரு.எ. கோபி,   உதவி தலைமை ஆசிரியர் திரு. டி. ஸ்ரீராம், ஆசியர்கள் திருமதி. கே. விமலா திருமதி எஸ். சாரதாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.