செய்தி வெளியீடு எண் :79 நாள் : 24.8.2017 பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்திட பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்.

செய்தி வெளியீடு எண் :79 நாள் : 24.8.2017 பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்திட பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் வேண்டுகோள்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும்  தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் தங்களது பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 24.8.2017 அன்று  சூரமங்கலம் மண்டலம் நரசோதிப்பட்டி சைதன்யா பள்ளியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில்  தனி அலுவலர் மற¦றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் கேட்டுக் கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் தெரிவித்தாவது :-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இப்பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என,  பல முறை மாநகராட்சி நிர்வாகத்தினரால் கோரிக்கை பொதுமக்களிடையே  வைக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில் அனைத்து தரப்பினரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  குறிப்பாக பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதோடு, டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்பான விவரங்களை மாணவர்களிடையே தெரிவிப்பதன் மூலம் பெற்றோர்களை உடனடியாக சென்றடைந்து, வீடுகளை தூய்மையாக பராமரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  
எனவே அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்து, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள பகுதிகளிலும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்திட வேண்டும் எனவும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  ஆணையாளர் தெரிவித்தார். முன்னதாக டெங்கு தடுப்பு உறுதிமொழி ஆணையாளர் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்  மருத்துவ அலுவலர் திருமதி செ.கீர்த்தனா,  தாய் சேய் நல அலுவலர் திருமதி என். சுமதி, சுகாதார அலுவலர் திரு.எஸ். மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.வீ. சரவணன், திரு.கே. பிரகாஷ் திரு.எ. கோபி, பள்ளி நிர்வாக அலுவலர் , தலைமை ஆசிரியர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.