செய்தி வெளியீடு எண் :78 நாள் : 23.8.2017 அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர துப்புரவு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்

செய்தி வெளியீடு எண் :78 நாள் : 23.8.2017 அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர துப்புரவு பணிகள் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்


அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதி, மகப்பேறு பிரிவு , புற மற்றும் உள்நோயாளிகள் பிரிவு  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர துப்புரவு பணிகளை  23.8.2017 அன்று தனி அலுவலர் மற¦றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் தெரிவித்ததாவது:-
சேலம் மாநகராட்சி  பகுதிகள் முழுவதிலும் தீவிர துப்புரவு பணிகள், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தீவிர துப்புரவு பணிகள் துரிதமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டதின் அடிப்படைடியில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  பொதுமக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரத்தையோடு தங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  குறிப்பாக மருத்துவமனை வளாகங்கள், செவிலியர்கள் விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை முறையாக பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.  மருத்துவ பணிகள் மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பணிகளையும் சிரத்தையோடு மருத்துவ பணிகளை ஈடுபட்டுள்ள அனைவரும் மேற்கொள்ள வேண்டும். 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை வளாகங்களில் பொதுமக்கள் சிகிச்சைக்காக  அதிகளவில் வருகை தருவதாலும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு  தொடர் சிகிச்சை பெற்று வருவதாலும், நோய் தடுப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நடவடிக்கைகளுக்கு மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்களும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் தீவிர துப்புரவு பணிகள் , சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், நில வேம்பு குடிநீர் வழங்குதல், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகத்தல் , பொதுமக்கள் குடிநீர் தேக்கி வைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்து , அவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கு ஏதுவாக மருந்துகள் ஊற்றுவது மற்றும் வெளிப்பகுதிகளில்,  வீடுகளுக்குள் கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத் தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் அடிப்பது போன்ற பல்வேறு சுகாதார மேம்பாட்டு பணிகள் தினந்தோறும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற  வேண்டும் எனவும், மாறாக சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது எனவும் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.  முன்னதாக அரசு மற்றும்  தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் , மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொறுப்பு) மரு. எம். ராஜசேகர், பொது மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் மரு. சி. ராஜசேகர், மருத்துவமனை உள் தங்கும் உதவி மருத்துவர் மரு. பி. சரளாபாய், தாய் சேய் நல அலுவலர் திருமதி. என். சுமதி , சுகாதார அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.